300 பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாச ஆபாச வீடியோ- தேவ கவுடா குடும்பத்தை கை கழுவியது பாஜக!
பெங்களூர்: கர்நாடகாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) எம்பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுமாகிய பிரஜ்வல் ரேவண்ணாவின் 300க்கும் மேற்பட்ட பெண்களுடனானா உல்லாச ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவே முடியாது என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா .முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன். அதாவது தேவகவுடாவின் பேரன். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன். தற்போதைய தேர்தலிலும் ஹாசன் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடா. 1980களில் இருந்து தேவகவுடா குடும்பத்தின் பரம வைரியான புட்டசுவாமி கவுடாவின் பேரன்தான் ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடா.

ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஹாசன் தொகுதி முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளரான சிட்டிங் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் காட்டுத் தீயாக பரவின. 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் அந்த ஆபாச வீடியோக்கள்தான் கர்நாடகாவில் பெரும் பிரளயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. மே 7-ந் தேதி அடுத்த கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று காலை இந்தியாவை விட்டே பிரஜ்வல் ரேவண்ணா தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவே மாட்டோம் என பாஜக தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை; நாங்கள் கருத்து தெரிவிக்கவும் தேவை இல்லை; மாநில அரசுதான் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடக்கும் நிலையில் நாங்கள் எதுவும் பேசுவதும் சரியானதும் அல்ல என தேவகவுடாவை குடும்பத்தை கை கழுவிவிட்டனர் பாஜக தலைவர்கள்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications