‛குபேரர்கள்’.. கோடீஸ்வரர்களை அதிகமாக களமிறக்கிய பாஜக.. பின்தங்கிய காங்கிரஸ்!கர்நாடகாவில் ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிகளவில் கோடீஸ்வர வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. மேலும் கடந்த 2018 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாகவும் ஏராளமானவர்கள் களமிறங்கி உள்ளனர்.

தற்போது கர்நாடகாவில் மொத்தம் 2,586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 790 வேட்பாளர்கள் தேசிய கட்சிகளையும், 255 பேர் மாநில கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். 640 பேர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளிலும் இருந்தும், 901 பேர் சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளனர்.
ஏடிஆர் ரிப்போர்ட்: இந்நிலையில் தான் ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு சார்பில் கர்நாடகா தேர்தல் தொடர்பாக முக்கிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், வேட்பாளர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விபரங்களை சேகரித்து வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மூலம் ஆராய்ந்து ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வருமாறு:
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை: கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் 592 பேர் ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்துகளையும், 272 பேர் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிக்கு இடையேயான சொத்துகளையும் கொண்டுள்ளனர். மேலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை 493 வேட்பாளர்களும், ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 578 வேட்பாளர்களும், ரூ.10 லட்சத்துக்கு கீழ் 651 வேட்பாளர்களும் சொத்து மதிப்புகளை கொண்டுள்ளனர்.
குபேரர்கள் அதிகரிப்பு: அதன்படி பார்த்தால் மாநிலத்தில் போட்டியிடும் 2,586 வேட்பாளர்களில் 1,087 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 42 சதவீதமாகும். கடந்த தேர்தலில் 35 சதவீத வேட்பாளர்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில் தற்பாது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாஜகவில் அதிகம்: மேலும் கட்சி வாரியாக கோடீஸ்வர வேட்பாளர்களை கணக்கீட்டால் பாஜகவில் 224 வேட்பாளர்களில் 216 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 215 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஜேடிஸெ் கட்சியில் 170 பேரும், ஆம்ஆத்மியில் 107 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 5 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும், சுயேச்சைகளில் 215 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
சராசரி சொத்து விபரம்: கட்சி வாரியாக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பை கணக்கீட்டால் ட்விஸ்ட் உள்ளது. அதாவது பாஜகவை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்த மதிப்பு தான் அதிகம் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.49.83 கோடியாகவும், பாஜகவின் சராசரி சொத்து மதிப்பு ரூ.39.41 கோடியாகும், ஜேடிஎஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.45 கோடியாகவும், ஆம்ஆத்மி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4.25 கோடியாகவும் இருக்கிறது. மேலும் களத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்பது ரூ.12.20 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications