கொரோனா பாதிப்பு.. பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி காலமானார்
பெங்களூர்: கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி இன்று காலமானார்.
கொரோனா காரணமாக வரிசையாக அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை காங்கிரஸ் எம்பி வசந்த குமார் கொரோனாவிற்கு பலியான நிலையில் பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி இன்று காலமானார். பாஜகவை சேர்ந்த அசோக் காஸ்டி முதல்முறை எம்பி ஆவார். இவர் கடந்த ஜூலை 22ம் தேதிதான் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியானார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடுமையான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் கடும் சிரமம் இருந்தது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் உடலில் ஆக்சிஜன் அளவும் மிகவும் மோசமாக குறைந்தது. அதோடு உறுப்புகளும் செயல் இழந்தது.
இவரின் உடல்நிலை இன்று மாலை நலிவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் இவர் காலமானார். 55 வயது நிரம்பிய இவர், கொரோனாவால் நுரையீரல் நலிவடைந்து மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக எம்பிக்கள், தலைவர்கள் பலர் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications