பிரகாஷ்ராஜ் மீன்களுக்கு இரையாவார் என கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ்ராஜை மிரட்டும் வகையில் பேசி இருந்தார் பாஜக எம்.எல்.ஏ யஷ்பால் சுவர்ணா.

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

Prakash Raj

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உடுப்பியில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ யஷ்பால் ஆனந்த் சுவர்ணா, பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

பாஜக எம்எல்ஏ யஷ்பால் ஆனந்த் சுவர்ணா பேசுகையில், "வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொண்டு இந்தியாவில் வன்முறையை தூண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் முயற்சிக்கின்றனர். போராட்டக்காரர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல. அவர்களின் பின்னணியை சரி பார்க்க வேண்டும். அப்போது உண்மை தெரிந்து விடும். இதுபோன்ற அரசியல் தொடர்ந்தால் பாஜக தொண்டர்கள் தகுந்த முறையில் பதிலடி கொடுப்பார்கள்.

நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்" என்று எச்சரிக்கை விடுத்தார். அதாவது கொன்று கடலில் வீசி விடுவோம் என்ற தொனியில் அவர் பேசியிருந்தார்.

மேலும், ராகுல் காந்தி போதைக்கு அடிமையானவர் என்றும் பேசியிருந்தார். இந்ந்நிலையில் உடுப்பி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் பாஜக எம்எல்ஏ யஷ்பால் சுவர்ணா மீது போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் யஷ்பால் சுவர்ணா மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+