டெல்லிக்கே மிரட்டல்.. கர்நாடக பாஜகவில் 2 அண்ணாமலை! “ஜேடிஎஸுடன் கூட்டணி வெச்சா” - எம்எல்ஏ போர்க்கொடி
பெங்களூர்: கர்நாடகாவில் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து இருக்கும் நிலையில் இதற்கு அக்கட்சி எம்.எல்.ஏ எஸ்டி சோமசேகர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கும் பாஜக யஷ்வந்த்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.டி. சோமசேகர், "இந்த கூட்டணிக்கு சில பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் இடையே எதிர்ப்பு உள்ளது. யாரும் வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆனால் கட்சிக்கு உள்ளே அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நான் தேர்தலில் 6 முறை போட்டியிட்டு உள்ளேன். அந்த தொகுதியின் முதன்மை எதிர்க்கட்சியே ஜேடிஎஸ்தான். 20 ஆண்டுகளாக அவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.

அவர்களுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுவது மிகவும் கடினம். தனிப்பட்ட முறையில் நான் இந்த கூட்டணியை எதிர்க்கிறேன். இது பற்றி என்னுடைய கட்சித் தலைவர்களுடன் பேச இருக்கிறேன்." என்றார். அப்போது காங்கிரஸ் கட்சியில் நீங்கள் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்துவிட்டு எந்த முடிவாக இருந்தாலும் நான் எடுப்பேன். எங்கள் கட்சி தொண்டர்கள் இந்த கூட்டணிக்கு எதிராக உள்ளனர்.
நான் எங்கு சென்றாலும் இந்த கூட்டணிக்கு எதிரான கருத்துக்களே வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி வெளியிட்ட பிறகு என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகு முடிவுகளை அறிவிப்போம். ஆதரவாளர்கள் இல்லாமல் நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. தனது உத்தரவு இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என எடியூரப்பா கேட்டுக்கொண்டு உள்ளார். ஒரு மாத காலம் நான் அமைதியாக உள்ளேன். எடியூரப்பாவுக்காக நான் பேசாமல் இருந்தேன். வெறுப்பில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். எடியூரப்பாவிடம் கேட்டுவிட்டு எந்த முடிவாக இருந்தாலும் அறிவிப்பேன்." என்றார்.
இவரை போன்றே எல்லாப்பூர் பாஜக எம்.எல்.ஏ. சிவராம் ஹெப்பரும் கட்சி நடவடிக்கைகளைவிட்டு ஒதுங்கியபடி இருந்து வருகிறார். அவருடன் சோமசேகரும் செய்தியாளர்களை சந்தித்தார். சோமசேகரும் ஹெப்பரும் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்து எடியூரப்பா முதலமைச்சராக உதவியவர்கள். இவர்களால்தான் அப்போது குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ் - காங்கிரஸ் ஆட்சியே கவிழ்ந்தது. இந்த நிலையில் மீண்டும் பாஜக - குமாரசாமியுடன் கூட்டணி அமைப்பது இவர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடாவால் தொடங்கப்பட்டது.
தற்போது, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமை தாங்கி வரும் இக்கட்சி, கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், தேர்தலுக்கு பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அக்கட்சி ஆட்சிக்கு வந்தது. குமாரசாமி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களிலேயே காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக குதிரை பேரம் மூலமாக வாங்கி குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கர்நாடக தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்த குமாரசாமி, தங்களின் ஆட்சியையே கவிழ்த்த பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications