“திரும்பவும் எமர்ஜென்சி எக்சிட்”.. கூட்டத்தில் இருந்து வெளியேறிய தேஜஸ்வி சூர்யாவை கலாய்த்த காங்கிரஸ்
பெங்களூர்: கூட்டத்தில் இருந்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா பாதியில் வெளியேறியுள்ளார். இதனை "தேஜஸ்வி சூர்யா மீண்டும் ஒருமுறை 'எமர்ஜென்சி எக்சிட் டோர்' வழியாக தப்பித்துள்ளார்" என கிண்டல் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா, பசவனக்குடி பாஜக எம்.எல்.ஏ ரவி சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டுறவு வங்கியான நியாமிதா - குரு ராகவேந்திரா சகாரா வங்கியில் நடந்த பல கோடி ரூபாய் மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் நடந்த மோசடி உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார் பாஜகவின் ரவி சுப்பிரமணியன். இந்நிலையில் தற்போது அதுகுறித்து பேசாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, பாஜக எம்.எல்.ஏ ரவி சுப்ரமணியன் ஆகிய இருவரும் அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிச் சென்றனர்.
இதற்கிடையே, வாடிக்கையாளர்கள் யாரும் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் அனுப்பிய குண்டர்கள் உள்ளே புகுந்து திட்டமிட்டே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் அங்கிருந்து கிளம்பியதாகவும் தேஜஸ்வி சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் இருந்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா பாதியில் வெளியேறும் பரபரப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சிம் "பாஜகவின் தேஜஸ்வி சூர்யா மீண்டும் ஒருமுறை கூட்டத்திலிருந்து 'எமர்ஜென்சி எக்சிட் டோர்' வழியாக தப்பித்துள்ளார். தேஜஸ்வி சூர்யாவின் திமிர், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை தாக்கி துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது." எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறந்ததாக புகார் கூறப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தது பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா என்பது தெரியவந்தது. அப்போது அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பயணித்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தச் சம்பவம் காரணாமாக எதிர்க்கட்சிகள் தேஜஸ்வி சூர்யாவையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தன. இந்த சம்பவத்தை மையமாக வைத்து தேஜஸ்வி சூர்யா சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி மீண்டும் கிண்டல் செய்துள்ளது கர்நாடக காங்கிரஸ் கட்சி.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications