தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்தார் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா! அண்ணாமலை பங்கேற்று வாழ்த்து!
பெங்களூர்: பாஜக யுவ மோர்ச்சா தலைவரும் பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை இன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பாஜக பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா. பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவின் தலைவராக இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்.பியாக இருக்கிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வென்று எம்.பியான தேஜஸ்வி சூர்யா, தற்போது அதே தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்னாடக இசைப் பாடகியான சிவஸ்ரீ, பரதநாட்டியக் கலைஞரும் கூட. சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் அப்பா சீர்காழி ஸ்ரீ ஜெ. ஸ்கந்தபிரசாத் ஒரு மிருதங்க வித்வான். சிவஸ்ரீ பி.டெக் படித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரத நாட்டியத்தில் பட்டம் பெற்றுள்ளார். சமஸ்கிருதத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் - 2 படத்தின் வந்த வீர ராஜ வீரா பாடலை கன்னடத்தில் பாடியவர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பாடிய ராமரைப் பற்றிய பாடலைப் பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், ஓரிரு நிகழ்ச்சிகளில் தேஜஸ்வி சூர்யாவும், சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் ஒன்றாக கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டு மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
தேஜஸ்வி சூர்யாவும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்களும், நெருக்கமான அரசியல் பிரமுகர்களும் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

தேஜஸ்வி - சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமணத்தில் மத்திய அமைச்சர் வி. சோமண்ணா, எம்.பி. சி.என். மஞ்சுநாத், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வினய் குருஜி, முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தேஜஸ்வி - சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. புதுமண ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வரும் மார்ச் 9ஆம் தேதி பெங்களூர் பேலஸ் மைதானத்தில் உள்ள காயத்ரி விஹாரில் தேஜஸ்வி சூர்யா மற்றும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications