Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு வாங்க அமைச்சராக்குறோம்.. நடிகை ரம்யாவுக்கு வலைவீசிய பாஜக! முடிவு என்ன தெரியுமா? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யாவை, காங்கிரஸில் இருந்து இழுக்க பாஜக முயற்சித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இணைந்தால் உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்படும் என முக்கிய தலைவர் ஆபர் கொடுத்ததாக நடிகை ரம்யா தெரிவித்து இருப்பது அரசியலில் பேசும்பொருளாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், புதுவரவான ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஜனார்த்தன ரெட்டியின் கட்சி உள்பட ஏராளமான கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.

வேட்புமனுத்தாக்கல் தற்போது நிறைவு பெற்ற நிலையில் அதன் மீதான பரிசீலனையும் நடந்து முடிந்துவிட்டது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் களத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் உள்ளனர். நாளை வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசிநாளாகும். இதையடுத்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

BJP offered actress Ramya to become a minister, she explains in interview

தற்போதைய சூழலில் கர்நாடகாவை பொறுத்தமட்டில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் அதாவது 224 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 223 இடங்களிலும் ஜேடிஎஸ் 212 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மேலும் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வெளியிட்டுள்ளன. பாஜகவின் பட்டியலில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, டிகே சிவக்குமார், மாஜி எம்பியும், நடிகையுமான ரம்யா உள்பட 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தான் பாஜக சார்பில் நடிகை ரம்யாவுக்கு பெரிய ஆபர் கொடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாஜகவுக்கு வந்தால் அமைச்சராக்குவதாக நடிகை ரம்யாவிடம் பாஜகவுக்கு ஆபர் கொடுத்துள்ளது. இருப்பினும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யாவே தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ரம்யா கூறுகையில், ‛‛பாஜகவுக்கு வந்தால் அமைச்சராக்குவதாக எனக்கு ஆபர் வந்தது. காங்கிரஸ் கட்சியின் சில விஷயங்களை நான் எதிர்த்தேன். அப்போது எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிளவு இருப்பதாக நினைத்து பாஜக என்னை அழைத்தது. நான் மறுத்துவிட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் கேசி வேணுகோபால், சுர்ஜேவாலா பிரசாரம் செய்ய அழைத்தனர். அதற்கு நான் ஒப்புக்கொண்டுள்ளேன்.

BJP offered actress Ramya to become a minister, she explains in interview

அதேபோல் ஜேடிஎஸ் கட்சியும் என்னை அழைத்தது. குமாரசாமியை சலூன் ஒன்றில் சந்தித்தேன். அப்போது அன்பாக குமாரசாமி பேசியதோடு அரசியல் குறித்தும் விவாதித்தோம். அப்போது அரசியலில் இருந்து தூரம் செல்ல வேண்டாம் எனவும் அவர் கூறினார். ஆனால் நான் காங்கிரஸ் கட்சியை விட்டு எங்கும் போகவில்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா 2013ல் மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் எம்பியானார். அதன்பிறகு 2014 நாடாளுமன்ற தேர்தலில் 5 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் ஐடி விங்க் தலைவராக செயல்பட்ட ரம்யா அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக கர்நாடகா தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். நடிகை ரம்யாவுக்கு மாநிலம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் தான் அவரை பாஜக இழுக்க முயற்சித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+