Why Blood.. Same Blood: பாஜகவின் அரசியல் ”கேவலமானது”... நானும் பாதிக்கப்பட்டேன் - குமாரசாமி குமுறல்
பெங்களூரு: நாட்டில் பிற கட்சிகள் ஆட்சி செய்வதை பொறுக்க முடியாமல் பாரதிய ஜனதா கட்சி கேவலமான அரசியல் செய்து வருவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தெரிவித்து இருக்கிறார்.
பெங்களூருவில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையகமான ஜே.பி.பவனில் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'ஆபரேசன் தாமரை' என்ற திட்டத்தை பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கொண்டு வந்தார்.

ஆப்பரேசன் தாமரை
இந்த ஆப்பரேசன் தாமரை திட்டத்தின்கீழ் மாநில அரசை கவிழ்த்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கினர். பாஜகவின் அதிகார தாகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் எந்த அரசும் பாஜகவின் அதிகார தாகத்துக்கு முன்னாள் நிற்க முடியாது. பெரும்பான்மையாக வெற்றிபெற்ற கட்சிகளைக் கூட ஆட்சியமைக்க பாஜக அனுமதிக்காது.

கேவலமான அரசியல்
தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஆளும் சிவசேனா அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறுவதாக பாஜக சொல்கிறது. மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை வைத்து ஒருதரப்பு கேவலமான அரசியலை செய்து வருகிறது என்றால் அது வேறு யாருமல்ல.. பாஜகதான். அதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு கிடையாது. கர்நாடகாவில் நானும் இதை அனுபவப்பட்டு இருக்கிறேன்.

பொய் பிரச்சாரம்
கர்நாடகாவில் நான் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏக்களை நம்பவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை அவர்கள் கையில் எடுத்தனர். நான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே ரூ.19,000 கோடியை ஒதுக்கினேன். அந்த பட்டியலையும் கட்சியின் சட்டமன்றத் தலைவரிடம் வழங்கினேன்.
Recommended Video

அரசியலமைப்பு பாதுகாப்பு
எப்படியோ ஒரு வழியாக பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து ஆப்பரேசன் தாமரையை நடத்தி எனது அரசை கலைத்துவிட்டது. இன்று மகாராஷ்டிராவில் பாஜகவின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. நாடு முழுவதும் அவதூறுகளை அக்கட்சி பரப்பி வருகிறது. இந்தியாவில் இன்று அரசியலமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லாமல்போய்விட்டது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications