கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: இன்று முதல் பாஜக போராட்டம்! ஒரே பரபரப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனே அமலுக்கு வந்ததை கண்டித்து அதை வாபஸ் பெறக் கோரி பாஜக இன்று முதல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை திடீரென கடுமையாக உயர்த்தின. கர்நாடகாவில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 25.92% இருந்தது. இது தற்போது 29.84% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீசல் மீதான விற்பனை வரி 14.34% ஆக இருந்தது. இதுவும் 18.44% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மீதான விற்பனை வரி 3.92%; டீசல் மீதான விற்பனை வரி 4.1% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை வரி உயர்வு உடனடியாகவும் அமலுக்கு வந்தது.

கர்நாடகா அரசின் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வால், இம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3 உயர்ந்து ரூ102.84 ஆகவும் டீசல் விலை ரூ.3.50 உயர்ந்து 1 லிட்டர் டீசல் ரூ 89.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலை ரூ3 முதல் ரூ3.50 வரை உயர்ந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளனர் பொதுமக்கள்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டிருக்கிறது; இதனை சமாளிக்கவே பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தி இருப்பதாக பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் திங்கள்கிழமை முதல் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா எச்சரித்துள்ளார். அதன்படி இன்று முதல் கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications