அடுத்த ரவுண்டு.. கர்நாடக தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக! இன்னும் இருக்கு
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. 23 வேட்பாளர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கும் பாஜக, இன்னும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகா மாநில பாஜக அரசின் பதவிகாலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து அந்த மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 10 ஆம் தேதியும், மே மாதம் 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு இந்த ஆண்டில் மட்டும் பல முறை பயணம் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என கட்சியின் பல தலைவர்கள் கர்நாடகாவில் தங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மறுபக்கம் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலில், 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டு அங்கு பிரச்சாரத்தை செய்து வருகிறது.

அதே நேரம் பாஜகவில் நிலவி உட்கட்சி பூசல், ஆளும் கட்சி மீதான அதிருப்தி, எதிர்மறையான கருத்துக்கணிப்புகளின் காரணமாக வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சித் தலைமை தீவிர கவனம் செலுத்தி வந்தது. பாஜக தேசிய தலைமையே இதில் நேரடியாக தலையிட்டு வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டது. நேற்று முந்தினம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் கர்நாடக தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருந்தது. 189 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கொண்ட அந்த பட்டியலில் புதிதாக 52 புதிய வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று 23 பேர் கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. இன்னும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. மூன்றாம் கட்டமாக அந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications