52 பேர் புதுசு.. கர்நாடக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸும் இருக்காங்க
டெல்லி: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்களை கொண்ட முதல்கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு இருக்கிறது. இதில் 52 புதிய வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பு அளித்து இருக்கும் நிலையில் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடக தேர்தல்: கர்நாடகா மாநில பாஜக அரசின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருப்பதை அடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அம்மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு பல முறை பயணம் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என கட்சியின் பல தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
வேட்பாளர் பட்டியல்: அதேபோல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் குதித்துள்ளன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டு அங்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கிறது. அதே நேரம் பாஜகவோ வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வந்தது. பாஜக தேசிய தலைமையே இதில் நேரடியாக தலையிட்டு வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டது.

இந்த நிலையில் நேற்று முந்தினம் கர்நாடக தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இன்று கர்நாடக தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள்: அதன்படி 224 தொகுதியில் 189 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். இதில், குறிப்பாக 52 புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் 32 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 30 பேர் பட்டியல் சமூகத்தினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 16 பழங்குடியினர்களுக்கு பாஜக வாய்ப்பு அளித்து இருக்கிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 8 பெண்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அதேபோல் 31 பேர் முதுகலை பட்டம் படித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 9 மருத்துவர்களும், 5 வழக்கறிஞர்களும், 3 கல்வித்துறையை சார்ந்தவர்களும், ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், 8 சமூக செயற்பாட்டாளர்கள், 3 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்." பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications