துடைத்து எறியப்படும் பாஜக.. “தெற்கு” மொத்தமா காலி.. 2024 தேர்தலுக்கு முன்பாக விழுந்த சம்மட்டி அடி!
பெங்களூர் : மத்தியில் ஆளும் பாஜக, தென்னிந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவையும் பறிகொடுக்கிறது. இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் பாஜக ஆட்சியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பாஜக தற்போது ஆட்சியில் இருக்கும் ஒரே தென் மாநிலம் கர்நாடகா தான். அதிலும் கடந்த 2018 தேர்தலில் பாஜகவால் அங்கு பெரும்பான்மை பெற முடியவில்லை. 104 சீட்களை பாஜக பிடித்த நிலையில் மெஜாரிட்டி இல்லாத காரணத்தால், மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பின்னர், பலவித குதிரை பேர அரசியலை நடத்தி அங்கு, பாஜக ஆட்சிக்கு வந்தது. புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

தற்போது கர்நாடாகாவில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி 118+ இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
பாஜக, தாங்கள் ஆளும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவிலும் ஆட்சியைப் பறிகொடுக்கும். கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் 104 சீட்களை வென்றிருந்த நிலையில், தற்போது 74 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வென்ற பின்னர், அக்கட்சி தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைத்து வருகிறது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தவும் பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது 2019 மக்களவை தேர்தலில் பாஜக எளிதாக வெல்ல உதவியது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தென் மாநிலங்களிலும் தனது பலத்தை நிறுவ பாஜக முயன்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் பாஜக இன்று ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓராண்டுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய கர்நாடகா தேர்தல் முடிவுகள் அதில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியான சூழலில் பாஜகவின் இந்த தோல்வி தேசிய அளவில் பெரும் சிக்கலை பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications