Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரம்.. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு.. உறுதி செய்த கர்நாடக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என துணை முதல்வர் டிகே சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே பிரபலமான உணவகம். இதன் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கிளையில் இன்று பிற்பகல் திடீரென மர்ம பொருள் வெடித்தது. இதில் 3 உணவக ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Blast at Bengalore Rameshwaram Cafe- 4 injured

ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது என்ன பொருள் என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக ஒயிட் பீல்டு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ராமேஸ்வரம் கஃபேயில் சிலிண்டர் வெடித்ததாக தகவல் கிடைத்தது. இதனால் சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இதனிடையே ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரான திவ்யா ராகவேந்திரா கூறுகையில், கை கழுவும் இடத்தில்தான் அடுத்தடுத்து இரு முறை மர்ம பொருள் வெடித்தது. அங்கு சிலிண்டர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அடையாளம் தெரியாத ஒரு நபர் பை ஒன்றை வைத்துவிட்டுச் சென்றதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தந்து வருகிறோம் என்றார்.

மேலும் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வின் அதிகாரிகளும் ராமேஸ்வரம் கஃபேவுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சூழலில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய விஷம செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிப்போம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+