பரபரத்த பெங்களூர்.. பாஜக எம்பி சகோதரர் அதிரடி கைது! நாடாளுமன்ற கலர் குண்டு சர்ச்சையில் சிக்கினாரே
பெங்களூர்: நாடாளுமன்றத்தில் கலர் குண்டு வீசியவர்களுக்கு பார்வையாளர் மாடத்தில் அமர பரிந்துரைத்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏன் தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
மைசூர் தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் பிரதாப் சிம்ஹா. கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அத்துமீறி சிலர் மக்களவைக்கு உள்ளேயும் நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் கலர் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாதான் பார்வையாளர் மாடத்திற்கான டிக்கெட் கிடைக்க பரிந்துரை செய்து இருந்தார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

பிரதாப் சிம்ஹாவுக்கு விக்ரம் சிம்ஹா என்ற சகோதரர் உள்ளார். இவர் பல கோடி மதிப்பிலான 126 மரங்களை வெட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து இருக்கிறார்கள். கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கடத்தியதாக போலீஸ் குற்றம்சாட்டி உள்ளது. மத்திய குற்றப்பிரிவின் முறைப்படுத்தப்பட்ட குற்ற தடுப்பு படையினர் இவரை கைது செய்து வனத்துறை வசம் ஒப்படைத்து உள்ளார்கள். எம்பியின் சகோதரர் மரங்களை வெட்டியதற்கான ஆவணங்கள் இருப்பதாக போலீஸ் தெரிவித்து உள்ளது.
விக்ரம் சிம்ஹா மரங்களை வெட்டி கடத்தியது உறுதியான நிலையில், அவர் தப்பிச் சென்றார். இதனை அடுத்து செல்போன் சிக்னல், சிசிடிவி கேமரா அடிப்படையில் அவரை போலீசார் கண்காணித்தனர். அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பது உறுதியான நிலையில், வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் உதவியுடன் விக்ரம் சிம்ஹாவை கைது செய்து உள்ளார்கள். அவரை கூடுதல் விசாரணைக்காக ஹாசன் மாவட்டத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா சிக்கி நெருக்கடியான நிலையில் இருந்து வரும் சூழலில் அவரது சகோதரர் மரங்களை வெட்டிய கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருப்பது அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பேரில் மக்களவையின் பார்வையாளர் மாடத்திற்கு வந்த 2 பேர் எம்பிக்கள் அமரும் இருக்கைகள், மேஜைகளில் கலர் புகை கக்கும் கருவிகளுடன் குதித்து அத்துமீறியது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications