கடவுள் பெயரில் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்தார் எடியூரப்பா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக ராஜ் பவனில் இன்று ஆளுநர் வஜுபாய் வாலாவை, சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக தலைவர் எடியூரப்பா.

கடந்த செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதையடுத்து ஆட்சியமைக்க பாஜக தரப்பு முயற்சி செய்யாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, இன்று ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலாவை, எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதுதொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Jul 26, 2019, 6:35 pm IST

முதல்வராக பதவி பிரமாணம் செய்தார் எடியூரப்பா. கடவுள் பெயரில் பதவிப் பிரமாணம் செய்தார் எடியூரப்பா.
Jul 26, 2019, 6:31 pm IST

எடியூரப்பா பதவியேற்பு விழா மேடைக்கு வருகை தந்தார் ஆளுநர் வஜுபாய் வாலா
Jul 26, 2019, 6:17 pm IST

எடியூரப்பா பதவியேற்பு விழாவில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்பு. முரளிதரராவ் தவிர்த்து பாஜக மேலிடத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
Jul 26, 2019, 6:01 pm IST

ராஜ்பவன் வந்து சேர்ந்தார் எடியூரப்பா. ராஜ்பவன் வளாகம் முழுக்க தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
Jul 26, 2019, 5:49 pm IST

பாஜக அலுவலகத்திலிருந்து ராஜ்பவனுக்கு கிளம்பினார் எடியூரப்பா. சற்று நேரத்தில் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்கிறார் எடியூரப்பா
Jul 26, 2019, 5:49 pm IST

எடியூரப்பா பதவியேற்பு விழா கோலாகலம். ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவை காண கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை
Jul 26, 2019, 5:03 pm IST

உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். மூன்றே மாதங்களில் முந்தைய ஆட்சியைவிட சிறப்பான ஆட்சியை கொடுப்பேன். பாஜக தொண்டர்கள் மத்தியில் எடியூரப்பா உரை.
Jul 26, 2019, 4:47 pm IST

இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரிலுள்ள பாஜக அலுவலகம் செல்கிறார் எடியூரப்பா. தொண்டர்கள் மத்தியில் எடியூரப்பா உரையாற்ற உள்ளார்.
Jul 26, 2019, 4:36 pm IST

ஜூலை மாதத்தில் குமாரசாமி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய எடியூரப்பா உத்தரவு
Jul 26, 2019, 3:48 pm IST

எடியூரப்பா பதவியேற்பு விழாவை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு. அரசியல்சாசனத்திற்கு எதிராக எடியூரப்பா பதவியேற்பதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு.
Jul 26, 2019, 12:25 pm IST

சித்தராமையாவுடன் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்கள் ஆலோசனை. எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காமல் தடுக்க வியூகம் .
Jul 26, 2019, 11:07 am IST

எடியூரப்பா இன்னும் ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எடியூரப்பா அரசுக்கு கெடு விதித்த ஆளுநர்.
Jul 26, 2019, 10:56 am IST

பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா ஆட்சியமைப்பது தவறு- காங்கிரஸ் போர்க்கொடி. அரசியல் சாசனம், ஜனநாயகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டு
Jul 26, 2019, 10:39 am IST

ஆளுநரை சந்தித்து மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள் முதல்வராக பதவி பிரமாணம்- எடியூரப்பா பேட்டி. என்னுடன் யாரெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளார்கள் என்பதை பின்னர் அறிவிப்பேன். முன்னாள் முதல்வர் குமாரசாமி, சித்தராமையா போன்றோரும் பதவியேற்பு விழாவிற்கு வர வேண்டும் .

BS Yeddyurappa to takes oath as CM: Live updates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+