பெரும் தலைகள் வரல.. அமைச்சர்களும் பதவியேற்கலையே.. இனி தான் எடியூரப்பாவுக்கு இருக்கு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 25வது முதல்வராக பாஜகவை சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா இன்று பதவியேற்ற நிலையில் அவருடன் மற்ற அமைச்சர்கள் யாருமே பதவியேற்கவில்லை. இதேபோல் முரளிதர் ராவ் தவிர மேலிட தலைவர்கள் யாரும் பதவியேற்பில் பங்கேற்கவில்லை.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கடந்த செவ்வாய்க்கிழமை, சட்டசபையில் நடந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கவிழ்ந்தது.
ஆனால் பாஜக உடனே ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் நட்டா ஆகியாரை சந்தித்த எடியூரப்பா மற்றும் கர்நாடகா மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

எடியூரப்பா கோரினார்
இதன்பின்னர் கடந்த இரண்டு நாள்களாக பாஜக ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் அமைதி காத்தது. இந்நிலையில் இன்று இன்று காலை சுமார் 10 மணியளவில் பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலாவை, எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முதல்வராக பதவியேற்பு
இதன்பின்னர் இன்றே முதல்வரவாக பதவியேற்க போவதாக எடியூரப்பா அறிவித்தார். இதன்படி இன்று மாலை 6.30 மணியளவில், கர்நாடக ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 76 வயதாகும் எடியூரப்பா கர்நாடகாவின் 25வது முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவை குழப்பம்
ஆனால் எடியூரப்பாவை தவி அமைச்சரவையில் வேறு யாரும் பதவியேற்கவில்லை அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதிலும் அதிப்திஎம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டிய நிலையிலும் எடியூரப்பா உள்ளார். இதனிடையே எடியூரப்பா ஒரு வாரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனவே பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.

முரளிதர் ராவ் மட்டும் பங்கேற்பு
சென்ற முறை ஆட்சி அமைத்த இரண்டு நாளில் பதவி விலக நேர்ந்த காரணத்தால் இந்த முறை பாஜக ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக உள்ளது.
இன்றை விழாவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் மட்டுமே மேலிடத்திலிருந்து வருகை தந்தார். அமித்ஷா, மோடி, ஜேபி நட்டா உள்பட யாருமே பதவியேற்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே











Click it and Unblock the Notifications