ஊசலாட்டம்! என்ன வேணாலும் நடக்கும்.. வித்தியாசம் இவ்ளோதான்! புரட்டிப்போட காத்திருக்கும் 26 தொகுதிகள்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், 26 தொகுதிகளில் வெறும் 500 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசம் நீடித்து வருகிறது. இதனால், எந்த ரவுண்டிலும் முன்னிலை நிலவரம் மாறக்கூடும் எனத் தெரிகிறது.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 119 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 72 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
இதில் ஒரு விஷயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. அதாவது, கர்நாடகாவில் 26 தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசம் நீடித்து வருகிறது. 26 தொகுதிகளில் 500 மற்றும் அதற்கும் குறைவான வாக்கு வித்தியாசம் நீடித்து வருகிறது.
சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாதி ரவுண்டுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில் 500 வாக்குகள் வித்தியாசம் என்பது எந்நேரமும் மாறக்கூடிய அளவுதான். அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த தொகுதிகளில் நிலைமை மாறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சொற்ப வாக்குகள் வித்தியாசம் காணப்படும் 26 தொகுதிகளில் 12 தொகுதிகள் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் மஜத முன்னிலை வகிக்கிறது.
சொற்ப வாக்கு வித்தியாசம் நிலவும் தொகுதிகள் :
ALAND தொகுதியில் பாஜக 223 வாக்குகள் முன்னிலை
ANEKAL தொகுதியில் பாஜக 185 வாக்குகளில் முன்னிலை
BABALESHWAR தொகுதியில் காங்கிரஸ் 554 வாக்குகளில் முன்னிலை
BELGAUM UTTAR பாஜக 343 வாக்குகளில் முன்னிலை
BELUR - காங்கிரஸ் 514 வாக்குகளில் முன்னிலை
BHATKAL - காங்கிரஸ் 262 வாக்குகளில் முன்னிலை
DEVANAGRE SOUTH - பாஜக 220 வாக்குகளில் முன்னிலை
DEVANAHALLI - காங்கிரஸ் 123 வாக்குகளில் முன்னிலை
GANDHI NAGAR - பாஜக 405 வாக்குகளில் முன்னிலை
GOKAK - காங்கிரஸ் 329 வாக்குகளில் முன்னிலை

GUBBI - மஜத 343 வாக்குகளில் முன்னிலை
GURMITKAL - மஜத 440 வாக்குகளில் முன்னிலை
HALIYAL - பாஜக 260 வாக்குகளில் முன்னிலை
HASSAN - மஜத 136 வாக்குகளில் முன்னிலை
HEBBAL - காங்கிரஸ் 272 வாக்குகளில் முன்னிலை
HOMNABAD - பாஜக 265 வாக்குகளில் முன்னிலை
JAGALUR - பாஜக 367 வாக்குகளில் முன்னிலை
KAMPLI - பாஜக 325 வாக்குகளில் முன்னிலை
MALAVALLI - காங்கிரஸ் 76 வாக்குகளில் முன்னிலை
MALUR - காங்கிரஸ் 438 வாக்குகளில் முன்னிலை
MUDIGERE - காங்கிரஸ் 96 வாக்குகளில் முன்னிலை
NAGAMANGALA - காங்கிரஸ் 323 வாக்குகளில் முன்னிலை
NARGUND - பாஜக 2 வாக்குகளில் முன்னிலை
RAICHUR - காங்கிரஸ் 268 வாக்குகளில் முன்னிலை
SINDGI - காங்கிரஸ் 422 வாக்குகளில் முன்னிலை
TUMKUR CITY - மஜத 474 வாக்குகளில் முன்னிலை.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications