கர்நாடகாவில் தேர்தல் முடிந்த கையோடு.. பாஜகவின் சிடி ரவி மீது பாய்ந்த வழக்கு.. என்ன காரணம்!
பெங்களூர்: இரு பிரிவனருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்த முயன்றதாக கூறி கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவரான சிடி ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. முதல்கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும் அடுத்த கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

தேர்தல் ஆணையம்: வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருவதால் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேநேரம் முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரச்சாரத்தில் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சி.டி.ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பு மற்றும் பகையை ஊக்குவிப்பது போல கருத்து பதிவிட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிக்கமகளூரு தேர்தல் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு: இது தொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில், " சி.டி.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவிற்காக சிக்கமகளூரு தேர்தல் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஐபிசி 505(2) (பகை, வெறுப்பை ஏற்படுத்தும் கருத்தை சொல்வது) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையை ஊக்குவித்த புகாரில் பசவனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல்: கர்நாடகாவை பொறுத்தவரை அங்கே மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. அதில் 14 தொகுதிகளுக்கு நேற்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 3ஆம் கட்டத்தில் வரும் மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி மோதல் நிலவும் மாநிலம் என்பதால் ரொம்பவே முக்கியமானது. கடந்த காலங்களில் கர்நாடகாவில் லோக்சபா தேர்தல்களில் பாஜகவுக்கே அதிக இடம் கிடைத்துள்ளன. மறுபுறம் காங்கிரஸ் இந்த முறை கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பதால் அவர்களும் அதிக இடங்களில் வெல்ல முனைப்பு காட்டுகிறார்கள்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக அப்படியே மொத்தமாக 25 இடங்களில் பெரிய வெற்றியை பெற்றது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications