புதுச்சேரி ரயில் நிலையத்தில் சிக்கிய பெங்களூரு 'சைக்கோ' மகள்... போலீசாரிடம் சொன்ன அந்த ஒரு வார்த்தை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரூ: பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில், சீகேஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் கடந்த திங்கள்கிழமை நடந்த சம்பவ அதிர்ச்சி இன்னும் அங்கு விலகவில்லை.. பெற்ற தாய், தகப்பன், தங்கையை கத்தியால் குத்திய பெண், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் இளம்பெண் கைப்பட எழுதிய டைரியையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

சாப்ட்வேர் என்ஜினியர் சுந்தர், அவருடைய மனைவி முத்துலட்சுமி, இவர்களுடைய 19 வயது மகள் சுப்ரியா ஆகிய 3 பேருமே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

Bengaluru triple murder Swetha case Kenneth case Bengaluru crime news triple murder investigation 3

பெங்களூரு சுவேதா

இந்த தம்பதியின் மூத்த மகளான 24 வயது சுவேதா, தன்னுடைய பெற்றோரையே கொடூரமாக கொன்றுவிட்டார்.. பிறகு புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் சுவேதாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுவேதா போலீஸாரிடம் வாக்குமூலம்தான் இப்போது எல்லோரையும் அதிர வைத்திருக்கிறது.

"என் வீட்டில் எனக்கு எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது. எந்த முடிவையும் நானாக எடுக்க என் பெற்றோர் அனுமதிக்கவே இல்லை. நான் எப்போதும் வீட்டில் தனிமையிலும் கடுமையான மன அழுத்தத்திலும்தான் இருந்தேன். என் சோகத்தையும், எனக்குள் இருந்த மன உளைச்சலையும் யாரிடமும் சொல்ல முடியாமல் ஒரு டைரியில் தொடர்ந்து எழுதி வந்தேன்.

பாட்டு கேட்ட கென்னத்

இந்த நிலைமையில்தான் எனக்கும் கென்னத் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், என் காதலை என் பெற்றோர், குறிப்பாக என் அம்மா முத்துலட்சுமி எதிர்த்தார். இது எங்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார்.

பிறகு சுவேதா சொன்னபடியே, போலீஸார் அவருடைய டைரியைக் கைப்பற்றி பார்த்தபோது, அதில் பல பக்கங்களுக்குத் தன்னுடைய தனிமையைப் பற்றியும் சோகத்தைப் பற்றியும் அவர் உருக்கமாக எழுதியிருந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் கொலை நடந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்தும் சுவேதா அந்த டைரியில் விவரித்துள்ளார்:

புது பிசினஸ் பிளான்

"நானும் என் காதலர் கென்னத்தும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். சமீபத்தில்தான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, புதுசாக ஒரு பிசினஸ் தொடங்க பிளான் பண்ணினோம். இதற்காக நான் பல இடங்களில் 30 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தேன். இந்த பாக்கி தொகைக்கான நோட்டீஸ்கள் அனைத்தும் ஒயிட்ஃபீல்டில் இருக்கும் என் பெற்றோரின் வீட்டு முகவரிக்கு சென்றன.

இதைப் பார்த்துவிட்டு என் அம்மா என்னிடம் பயங்கரமாக சண்டை போட்டார். சம்பவத்தன்று சீகேஹள்ளி வீட்டில் என் அம்மாவுடன் எனக்கு மீண்டும் பெரிய தகராறு ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில்தான், நான் என் அம்மாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்தேன். அப்போது கென்னத் அதே ரூமில்தான் இருந்தார். ஆனால், அவர் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததால் அவருக்கு இது தெரியாது.

அம்மா உடலை இழுத்து

அம்மா இறந்த பிறகு, உடலை குளியலறைக்குள் இழுத்துச் செல்வதற்கும், தரையில் இருந்த ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்வதற்கும் மட்டும்தான் கென்னத் எனக்கு உதவினார்.

இதற்கு நடுவில் வீட்டில் இருந்த அம்மாவின் போனுக்கு என் அப்பா சுந்தர் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார். அம்மா போன் எடுக்காததால் சந்தேகமடைந்த அப்பாவும், என் தங்கை சுப்ரியாவும் நேராக சீகேஹள்ளி வீட்டிற்கே வந்துவிட்டார்கள். வீட்டிற்குள் நுழைந்த என் தங்கை சுப்ரியா, 'அம்மா எங்கே?' என்று தேடத் தொடங்கினாள்.

பயந்துபோன நான் உடனே அவளையும் கத்தியால் குத்தினேன். சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க ஓடிவந்த என் அப்பா சுந்தரையும் நான் கத்தியால் குத்தினேன்" என்று சுவேதா தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பெரிய ட்விஸ்ட்

ஆனால், இந்த வழக்கில் ஒரு திடீர் ட்விஸ்ட்டாக, சுந்தர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் போலீஸாரிடம் ஒரு மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், "கென்னத்தான் எங்களைக் கத்தியால் குத்தினார்" என்று சுந்தர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், கொலையில் கென்னத்தின் நேரடிப் பங்களிப்பு என்ன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கொலைகளை செய்து முடித்த பிறகு, சுவேதாவும் கென்னத்தும் எச்.ஏ.எல் பகுதியில் இருக்கும் கென்னத்தின் நண்பர் வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு பைக் மூலமாகத் திருவண்ணாமலைக்குத் தப்பி ஓடியுள்ளனர். ஆனால், திருவண்ணாமலையில் வைத்து பைக் திடீரென பழுதாகிவிட்டது. போலீஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், கென்னத் சுவேதாவை மட்டும் புதுச்சேரிக்குச் செல்லும் ஒரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.

சுவேதா புதுச்சேரியில் பிடிபட்டுவிட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் கென்னத்தைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸார் மிகத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+