பிளானே வேற.. மீண்டும் சீன்போடும் வாட்டாள் நாகராஜ்! பெங்களூர் டூ மண்டியா! நாளை கேஆர்எஸ் அணை முற்றுகை
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து நாளை (அக்டோபர் 5) பெங்களூரில் இருந்து ஏராளமான வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணையை வாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகையிட கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் நாளை ஊர்வலம் எப்படி நடக்கும்? என்பது பற்றி வாட்டாள் நாகராஜ் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா, பெங்களூரில் அடுத்தடுத்து பந்த் நடத்தப்பட்டது. அதன்பிறகு கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், ஒருங்கிணைந்த கன்னட அமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கடந்த மாதம் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட்டது.

இதனால் தமிழகம்-கர்நாடகா இடையேயான பஸ் போக்கவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பெங்களூர், மைசூர், மண்டியா உள்ளிட்ட தென்கர்நாடகாவின் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் அக்டோபர் 5-ந் தேதி கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர் அணை) சலோ போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்தார்.
அதாவது தமிழ்நாட்டுக்கு காவிரியில் கேஆர்எஸ் அணையில் இருந்து தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பெங்களூரில் இருந்து மண்டியா சென்று கேஆர்எஸ் அணையை முற்றுகையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என அவர் வலியுறுத்த உள்ளார்.
இந்நிலையில் தான் நாளை நடக்கும் கேஆர்எஸ் அணை முற்றுகை போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் விவரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: காவிரிக்காக போராட்டம்.. நிரந்தரமாக காவிரிக்காக போராட்டம் நடத்தப்பட உள்ளது. கன்னட அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து காவிரிக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறது. அக்டோபர் 5ம் தேதி (நாளை) பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணையில் இருந்து ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான வாகனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த போராட்டம் அமைதியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த ஊர்வலம் என்பது பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிளில் இருந்து காலை 10 மணிக்கு வாகன ஊர்வலம் புறப்பட்டு கேஆர்எஸ் அணைக்கு செல்லும். இந்த போராட்டத்தில் பங்கேற்க அனைவரும் வாகனங்களில் வர வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி கேஆர்எஸ் அணையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications