தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.. காவிரி ஆணையத்தில் கர்நாடகா சீராய்வு மனு தாக்கல்
பெங்களூர்: தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாடுக்கும் கர்நாடகாவிற்கும் இடையே மோதல் நீடிக்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் பிறக்கிற உத்தரவுகளுக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுகளில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கூடிய காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 3 ஆயிரம் கன அடி நீர் என்பதை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. கர்நடகா தாக்கல் செய்துள்ள மனுவில், தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம். கர்நாடகாவின் கருத்தை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் மேகதாது அணை விவகாரத்தையும் உடனே விசாரிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கூறியுள்ளது. காவிரியில் நீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருபக்கம் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடக அரசு ,காவிரி மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications