தமிழகத்திற்கு ஆதரவாக வந்த உத்தரவு! உண்மையை ஒப்புக்கொண்ட கர்நாடக முதல்வர்.. அடுத்த பிளான் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த 100 ஆண்டுகளில் இந்த முறைதான் தமிழகத்திற்கு குறைவான அளவில் நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் கர்நாடகா எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட முடிவு குறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை கேட்டு வாங்குவது பெரும் போராட்டமாக இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தண்ணீருக்காக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Cauvery Water Dispute

நீர் மேலாண்மை ஆணையம்

காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டும் தமிழகத்திற்கு நாளொன்றுக்கு தலா 3500 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இது கர்நாடக அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீ எல்லாம் தர முடியாது.. என அந்த அமைப்புகள் போராட்டத்தில் குதித்திருக்கின்றன.

காவிரி நீர்

நிலைமை தீவிரமடைந்ததை தொடர்ந்து டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, "காவிரி நீர் தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவுகள் சட்ட வல்லுநர்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பேசிய பின்னர்தான் எடுக்கப்படும். காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டும் சேர்ந்து தமிழகத்திற்கு 4.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறது. 2016, 2017, 2018 மற்றும் 2023 போன்ற ஆண்டுகளிலும் மழை பற்றாக்குறை இருந்தது. அப்போதும் இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் நமக்கு நல்ல மழைப்பொழிவு இருந்தது. அதிலும் கடந்த ஆண்டு ஜூன் மாதமே கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையிலிருந்து 117 டிஎம்சிக்கு பதில், 400 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இதில் பெரும்பான்மையான நீர் கடலில்தான் கலந்தது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவு

எனவே, மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறது. மட்டுமல்லாது முன்னர் பசவராஜ் காலத்தில் இருந்த அதிகாரிகளே இப்போதும் ஆஜராக கர்நாடகா தரப்பு வாதங்களை முன் வைக்க இருக்கின்றனர். இந்த மாத இறுதி வரை கணக்கிட்டால் தமிழகத்திற்கு வெறும் 0.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே சென்று சேர்ந்திருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நாம் கொடுத்திருக்கும் மிகவும் குறைவான நீர் இதுதான். அதுவும் கூட.. நாம் திறந்துவிடவில்லை.. அணையை ஒட்டிய பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு சென்ற நீர்.

அணையின் நீர்வரத்து

நம்முடைய அணைக்கு எவ்வளவு நீர் வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஹாரங்கி (95%), கபினி (83%) ஹேமாவதி (67%) மற்றும் கே.ஆர்.எஸ்.(36%) அளவுக்கு நீர் வரத்தை பெறுகிறது. அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்திருக்கிறது என்பது நாம் ஆறுதல் அடையக்கூடிய விஷயமாக இருக்கிறது. அணைக்கான நீர் வரத்து 25000 அடி குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் 3500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த முரண்பட்ட விஷயத்தை நாங்கள் ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

நம் விவசாயிகளை பாதுகாப்பது எங்களின் கடமை. நாங்கள் அவர்களை கைவிட்டு விட மாட்டோம். சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். இதன் மூலம் குடிநீர் விநியோகம் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்படியாக மாநிலத்தின் நலனில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேகதாது அணை

மேகதாது அணை மூலம், கர்நாடகாவை விட தமிழகத்திற்கு தான் அதிக பலன்கள் கிடைக்கும். எங்களுக்கு 400 வாட் மின்சாரமும், குடிநீர் மட்டுமே கிடைக்கும். பாசனத்திற்கு நீரை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். ஆக.13 அன்று பந்த் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்களோ, பந்த் நடவடிக்கையோ இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாது. பொதுமக்கள், கன்னட அமைப்புகள் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+