இதெல்லாம் தேவையா? பெங்களூர் தமிழர்களை அச்சுறுத்தும் வாட்டாள் நாகராஜ்! ஒரு நியாயம் வேண்டாமா-அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி விவகாரத்தில் பெங்களூரில் வாழும் தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லும்படி வாட்டாள் நாகராஜ் பேசியுள்ளார். பெங்களூரில் வாழும் தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலான அவரது இந்த பேச்சு என்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு சில முக்கிய கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் இறுதியாக அளித்த தீர்ப்பின்படி கர்நாடகா காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கண்காணிக்கும்.

Cauvery water Dispute: Vatal Nagaraj threatened to Bangalore live Tamil people

இந்நிலையில் தான் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாக வழங்கவில்லை. பலமுறை தமிழக அரசு கோரிக்கை வைத்தும் கர்நாடகா உரிய அளவில் தண்ணீரை வழங்கவில்லை. இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையிட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதனை சரியாக கர்நாடகா பின்பற்றவில்லை. மழையில்லை, அணைகளில் தண்ணீர் இல்லை என கர்நாடகா கூறியது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதற்கிடையே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த திங்கட்கிழமை அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடகா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை கண்டித்து இன்று கர்நாடகாவில் மண்டியாவில் பந்த் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பெங்களூரில் பல இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் கூறுகையில், ‛‛இங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பதை நான் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எந்த தண்ணீரை குடிக்கிறார்கள்? அவர்கள் அதை குடிக்க வேண்டுமா வேண்டாமா? அவர்கள் தண்ணீரை குடிக்க வேண்டும் எனில் உங்கள் நிலைப்பாட்டை மாற்றுங்கள்.

இல்லையெனில், ரயில்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் மூலமாக அவர்களை தமிழ்நாட்டிற்குள் அழைத்து கொள்ளுங்கள். காவிரி நீரை குடிக்காமல் தமிழகம் திரும்பும்படி கூறுங்கள் பார்க்கலாம். இனி வரும் நாட்கள் அவ்வளவு எளிதாக இருக்காது. தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் இது. தமிழ் படங்களுக்கு தடை விதிப்போம். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது'' என்றார்.

இந்த பேச்சு என்பது பெங்களூர் வாழ் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட காலமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பலபேர் அங்கேயே பிறந்து வளர்ந்து கன்னடம் படித்து எழுதவும் அறிந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இப்படி வாட்டாள் நாகராஜ் கூறியிருப்பது பெங்களூர் மட்டுமின்றி கர்நாடகா வாழ் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் அங்குள்ள தமிழர்கள் மனம் நொந்து போய் உள்ளனர்.

மேலும் இருமாநிலங்கள் இடையேயான காவிரி நீர் பகிர்வு என்பதை உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் உள்ளிட்டவை தான் நிர்ணயம் செய்துள்ளன. நீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்புகளை அனைவரும் மதிக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு தமிழர்களை சொந்த மாநிலமான தமிழகத்துக்கு அழைத்து செல்வது போன்ற பேச்சு என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு முறை காவிரி பிரச்சனை வரும்போதும் தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே வேறுபாடு காட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கூறியுள்ளனர். அதோடு பெங்களூர் என்பது இந்தியாவில் முக்கிய நகரமாக உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசித்து தொழில் செய்து வருகின்றனர். இப்படி குறிப்பிட்ட பிரச்சனையில் ஒரு மாநிலத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து அச்சுறுத்துவது என்பது உலகளவில் பெயர் பெற்ற பெங்களூருவுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்க வேண்டியது முக்கியமானதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+