நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்.. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிரடி!
தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் வட மாநிலங்களில் நல்ல மழை பெய்கிறது. அதே சமயம் கர்நாடகாவிலும் தலைக்காவிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல் மேகதாது உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் சில நாட்களில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கு இடையில் இன்று பெங்களூரில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்தது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பாக உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் 9.50 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு காவிரி ஒழுங்காற்று குழு ஆணையின்படி ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது கர்நாடகா அதை செய்யாமல் வஞ்சித்தது குறிப்பிடத்தக்கது. இது தமிழக விவசாயிகளை பாதித்தது.
நாளை காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என்ற செய்தி டெல்டா விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8 தேதி டெல்லியில் நடக்கும்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications