பாலத்திலிருந்து ஒருவர் விழுந்தார்.. போலீசுக்கு ஷாக் தந்த சாட்சியம்.. சித்தார்த் மாயத்தில் பரபரப்பு!
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போன வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று மாலை காணாமல் போனார். அவர் காணாமல் போனாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருகிறது.
மிக வெற்றிகரமாக இயங்கி வந்த கஃபே காபி டே நிறுவனத்தின் நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று மங்களூர் அருகே காணாமல் போனார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

எங்கு காணாமல் போனார்
மங்களூர் அருகே இருக்கும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்திற்கு அருகில்தான் விஜி சித்தார்த் காணாமல் போனார். நேற்று இரவு 8 மணிக்கு இவர் காணாமல் போனார். ஆனால் இன்னும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை எண்ணம்
இவர் கடிதத்தை பார்க்கும் பொழுது, இவர் தற்கொலை செய்து இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். உல்லால் பாலத்திற்கு கீழ் இருக்கும் நேத்ராவதி ஆற்றில் இவர் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் தற்போது அங்கு மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

என்ன ஷாக்
இந்த நிலையில் நேற்று இரவு உல்லால் பாலத்தில் இருந்து கீழே ஒருவர் விழுந்தார் என்று போலீசுக்கு நேரடி சாட்சியம் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது, அவர் அந்த வழியாக நடந்து சென்ற போது, நடுத்தர வயது நபர் ஒருவர் பாலத்தின் மேல் ஏறி நின்றார். அவர் கீழே விழுவதை பார்த்தேன் என்று சாட்சியம் அளித்த நபர் கூறியுள்ளார்.

மோசம்
இதனால் அந்த நடுத்தர வயது நபர் சித்தார்த்தாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆகவே தற்போது நேத்ராவதி ஆற்றில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது சித்தார்த் உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications