பெங்களூர் PG-யில் கொடூரம்.. உள்ளேயே புகுந்து இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்! பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தங்கும் விடுதியின் 3வது மாடிக்குள் நுழைந்து 24 வயது இளம்பெண்ணை, இளைஞர் கொலை செய்தது (Bangalore PG Murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்த இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்றது எப்படி? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பீகாரை சேர்ந்தவர் கிருத்திகுமார் (24). இளம்பெண்ணான இவர் பெங்களூரில் உள்ள கோரமங்களா 6வது பிளாக்கில் உள்ள வெங்கடரெட்டி லே-அவட் பகுதியில் அமைந்துள்ள பார்கவி பெண்களுக்கான தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.

bangalore karnataka crime

எம்பிஏ படிப்பை முடித்த கிருத்தி குமார் தங்கும் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிருத்தி குமார் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த தங்கும் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

தங்கும் விடுதியில் கிருத்தி குமார் 3வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் கடந்த 23ம் தேதி இரவு 11.10 மணியளவில் தங்கும் விடுதிக்குள் சென்ற நபர் அவரது அறைக்கு சென்று கதவை தட்டினார். கிருத்தி குமார் கதவை திறந்த நிலையில் அந்த நபர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்தார். இதனால் அந்த பெண் அலறி துடித்தார்.

தலைக்கேறிய உல்லாசம்.. வாசல்ல வந்து நின்ற மனைவி.. எஸ்.பிக்கு பறந்த போன்.. ஏடாகூடமா சிக்கிட்டாரு ஏட்டு


இதனால் பயந்துபோன நபர் அங்கிருந்து வேகமாக வெளியே ஓடிவிட்டார். இதற்கிடையே கிருத்தி குமாரின் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றவர்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தங்கும் விடுதியில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. அதாவது பெண்களுக்கான தங்கும் விடுதிக்குள் செல்ல ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அந்த நபர் விடுதிக்குள் நுழைந்து 3வது மாடிக்குள் சென்று கொலையை அரங்கேற்றி உள்ளார். இதனால் செக்யூரிட்டி குறைபாடு தான் கொலைக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் கொலை செய்த நபர் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. ஆனாலும் கிருத்தி குமாருக்கு நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தங்கும் விடுதிக்குள் நுழைந்து கிருத்தி குமாரை மர்மநபர் கொலை செய்தது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

வீடியோவில் பதிவாகி உள்ள காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. அதாவது டீசர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து கையில் பாலிதீன் கவருடன் வேகமாக ஒருவர் படிக்கட்டுகள் மூலம் கிருத்தி குமார் தங்கி உள்ள அறையை நோக்கி செல்கிறார். அவர் கிருத்தி குமார் தங்கியிருக்கும் அறையின் கதவை தட்டுகிறார்.

துண்டு துண்டாகும் பெங்களூர்.. 10 மாநகராட்சியாக விரைவில் பிரிப்பு? புது மசோதாவுக்கு ஒப்புதல்


கிருத்தி குமார் கதவை திறந்து வெளியே வருகிறார். அப்போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்ட முயல்கிறார். கத்தியை பார்த்த கிருத்தி குமார் பயத்தில் கூச்சலிடுகிறார். இந்த வேளையில் சற்றும் யோசிக்காத அந்த இளைஞர், கிருத்தி குமாரை சுவற்றின் ஒரு மூலையில் தள்ளி கழுத்தை கத்தியால் அறுக்கிறார். கழுத்தில் இருந்து ரத்தம் வழிய கிருத்தி குமார் துடிக்கதுடிக்க அப்படியே மூலையில் இருந்து சரிந்து விழுகிறார்.

இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து வேகமாக வெளியேறி படிக்கட்டுகள் வழியோ வெளியே செல்கிறார். அதன்பிறகு அந்த விடுதியில் தங்கி உள்ள பெண்கள் வந்து அவரை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த வீடியோ தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. தங்கும் விடுதியின் சிசிடிவியில் பதிவாகி உள்ள இந்த நபரின் உருவத்தை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+