பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

95% வெற்றிபெற்றுவிட்டது.. அடுத்த 14 நாட்கள் முக்கியம்.. சந்திரயான்-2 பற்றி இஸ்ரோ பரபர விளக்கம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவிகித பணிகளை எட்டிவிட்டோம். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்த 14 நாள்கள் முயற்சி செய்வோம் செய்வோம் என்றும் கூறியுள்ளது.

சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையில் இறங்கும் கடைசி நேர தருவாயில் தகவல் தொடர்பு சிக்னல் வரவில்லை.

இதனால் சோகத்தில் ஆழ்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களின் ஆறுதல் மற்றும் உற்சாகத்தால் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர்.

சந்திரயான் விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றி.. பிரதமர் மோடிக்கு காதர்மொகிதீன் பாராட்டுசந்திரயான் விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றி.. பிரதமர் மோடிக்கு காதர்மொகிதீன் பாராட்டு

மிகப்பெரிய முன்னேற்றம்

மிகப்பெரிய முன்னேற்றம்

இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான்-2-ல் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். இந்த திட்டத்தின்படி படி ஆர்பிட்டர் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை இணைத்து சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜுலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும், அதன் ஒவ்வொரு கட்டமுன்னேற்றத்தையும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் பார்த்தது.

நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல, வெளிப்புறம், மேற்புறம் மற்றும் நிலவின் துணை மேற்பரப்பு ஆகிய அனைத்து பகுதியையும் ஆய்வுதை செய்தை நோக்கமாக கொண்ட தனித்துவமான பணி தான் சந்திராயன் 2 .

ஆர்பிட்டர் சுற்றி வருகிறது

ஆர்பிட்டர் சுற்றி வருகிறது

ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 8 அதிநவீன அறிவியல் கருவிகள் மூலம் நிலவில் உள்ள தாதுக்கள் மற்றும் நீர் மூலக்கூறுகள் மற்றும் நிலவின் வளர்ச்சி மற்றும் மற்றும் அதன் வரைபடத்தை பற்றிய நமது புரிதல் இன்னும் அதிகரிக்கும்.

அதிநவீன கேமரா

அதிநவீன கேமரா

ஆர்பிட்டரில் இதுவரை எந்த ஒரு நிலாவை ஆய்வு செய்யும் பணியிலும் இல்லாத அளவாக அதிநவீன கேமரா (0.3 மி( உள்ளது. இந்த கேமரா மூலம் மிகத்துள்ளியமான தெளிவான நிலாவினை படம் பிடித்து நமக்கு ஆர்பிட்டர் அனுப்பும். இது உலகளாவிய விஞ்ஞானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துல்லியமான ஏவுதல் மற்றும் நல்ல திட்டமிட்டுதல் காரணமாக ஒரு வருடத்திற்கு பதிலாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் நீண்ட ஆயுள் (ஆர்பிட்டர் ஆயுள்) உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள்

விக்ரம் லேண்டரின் அனைத்து அமைப்புகளும், அனைத்து சென்சார்களும் இந்த கட்டம் வரை சிறப்பாக செயல்பட்டன. லேண்டரில் பயன்படுத்தப்படும் மாறி உந்துதல் உந்துவிசை தொழில்நுட்பம் போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டு நிரூபித்துள்ளன.

கவலைப்படவில்லை

கவலைப்படவில்லை

சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவிகித பணிகளை எட்டிவிட்டோம். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம்" இவ்வாறு இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

English summary
Chandrayaan - 2 Latest Update: isro said 90 to 95% of the mission objectives have been accomplished and will continue contribute to Lunar science
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X