ரெடியா இருங்க.. பூமி டூ நிலவு! விக்ரம் லேண்டரின் லைவ் வீடியோ.. இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் விரைவில் தரையிறங்க உள்ள நிலையில் இதனை லைவ்வாக பார்ப்பது குறித்த அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வந்ததிலிருந்து நிலவு மீதான ஆர்வம் நமக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த ஆர்வத்திற்கு தீனி போட்டது ரஷ்யாதான். முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பியது, விலங்குகளை அனுப்பியது, மனிதனை அனுப்பியது, பெண்களை அனுப்பியது, விண்வெளி நிலையத்தை அமைத்தது, நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது என சோவியத் ரஷ்யா ஒரு பெரும் புரட்சியே செய்து காட்டியது. இப்படி செயல்பட்ட ரஷ்யா, சமீபத்தில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய லூனா 25 எனும் விண்கலத்தை அனுப்பியது.

ஆனால் இந்த விண்கலம் நிலவில் பத்திரமாக தரையிறங்காமல் மோதி வெடித்தது. ஆனால் இதே இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பத்திரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்து வருகிறது. எனவே இதனை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நிலவுக்கு ரோவர் அனுப்பும் யோசனை நமக்கு சந்திரயான் 1 திட்டத்திலேயே தோன்றிவிட்டது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர் தான்.
அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து சொன்னது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது.
இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113x157 கி.மீ என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எனவே இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில்(LIVE) காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. அதாவது இந்த லைவ் 23ம் தேதி மாலை 5.27 மணி முதல் தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/) , யூடியூப் , இஸ்ரோவின் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications