‛‛சித்தராமையா வேண்டாம்’’.. கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார்? ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையாவுக்கு பதில் துணை முதல்வர் டிகே சிவக்குமாரை நியமிக்க காங்கிரஸ் எம்எல்ஏ சிவகங்கா பசவராஜ் ஆதரவு தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே முதல்வர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது.

இறுதியாக முதல்வர் பதவி என்பது சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. டிகே சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார். மேலும் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரும் முதல்வராக பொறுப்பு வகிப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த தகவலையும் வெளிப்படையாக கூறவில்லை.
இத்தகைய சூழலில் தான் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். இந்த விழாவில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்த மடாதிபதி சந்திரசேகர சுவாமி பேசினார். அப்போது, டிகே சிவக்குமாருக்காக சித்தராமையா முதல்வர் பதவியை விட்டு தர வேண்டும் என்று கூறினார்.
இதுதொடர்பாக மடாதிபதி சந்திரசேகர சுவாமி பேசும்போது, ‛‛ஒவ்வொருவருக்கும் முதல்வர் ஆகும் உரிமை இருக்கிறது. நம்முடைய டிகே சிவக்குமார் இன்னும் முதல்வர் ஆகவில்லை. சித்தராமையா ஏற்கனவே முதல்வராக இருந்தவர். தற்போதும் முதல்வராக செயல்பட்டு வருகிறது. வரும் காலத்தில் சித்தராமையாக தனது பதவியை டிகே சிவக்குமாரரக்கு விட்டு கொடுக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை சித்தராமையாவிடம் வேண்டுகோள் வைக்கிறேன். டிகே சிவக்குமாரை முதல்வராக்குங்கள் என்று'' என கூறினார்.
இதுபற்றி சித்தராமையாவிடம் கேட்டபோது, ‛‛முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்கிறது. அதனால் இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்'' என்றார். இதையடுத்து தற்போது கர்நாடகா காங்கிரஸில் மீண்டும் முதல்வர் பதவி தொடர்பான விவாதம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா தரப்பினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸார் இரண்டு கோஷ்டிகளாக மோதி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையான நிலையில் முதல்வர் பதவி பற்றி யாரும் வாய்திறக்க கூடாது என்று டிகே சிவக்குமார் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கு பதில் துணை முதல்வர் டிகே சிவக்குமாரை நியமிக்க சன்னிகிரி காங்கிரஸ் எம்எல்ஏ சிவகங்கா பசவராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சன்னிகிரி காங்கிரஸ் எம்எல்ஏ சிவகங்கா பசவராஜ் கூறுகையி்ல, ‛‛டிகே சிவக்குமாரால் கட்சிக்கு உழைக்கவும், தியாகம் செய்யவும் முடிகிறது. இதனால் தான் காங்கிரஸ் தலைரவாக நியமிக்கப்பட்டார். அவரது பணி அனைவரையும் ஈர்த்துள்ளது. இத்தகைய சூழலில் தேவையின்றி துணை முதல்வர் பதவியை உருவாக்க நினைக்கிறார்கள். என்னை பொறுத்தவரை எத்தனை துணை முதல்வர்களை வேண்டுமானாலும் நியமித்து கொள்ளுங்கள். ஆனால் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications