ஏய் என்ன நினைச்சிட்டு இருக்க! பெங்களூர் அரசு பஸ்சில் டிரைவருக்கு பளார் விட்ட பெண்.. திகைத்த பயணிகள்! வீடியோ
பெங்களூர்: பெங்களூரின் பரபரப்பான சாலையில் அரசு பேருந்து ஒன்றில் டிரைவருக்கும் பெண் பயணி ஒருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவதம் முற்றி கைகலப்பாக மாற இருவரும் அடித்துக்கொண்டனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பெங்களூர் சாலைகளில் அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கிடையே நடைபெறும் மோதல்கள், அடிதடிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆவதை பார்க்க முடிகிறது. உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்றாக உள்ள பெங்களூரில், சாலைகளில் விதிமீறல்கள் அதிகமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே அடிக்கடி வார்த்தையுத்தம் ஏற்படுகிறது.

அரசு பஸ் டிரைவரை தாக்கிய பயணி
சொல்லப்போனால், இப்படி மோதல் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தினமும் ஏதாவது ஒரு இடத்தில் வாய் தகராறுகள் நடக்கின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC) டிரைவர் ஒருவருக்கும் பெண் பயணியுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கன்னத்தில் பளார் விட்ட வீடியோ
Caught on Camera: BMTC Bus Driver and Woman Passenger in Slap Spat on Tumakuru Road
— Karnataka Portfolio (@karnatakaportf) September 10, 2025
A seemingly routine BMTC bus ride on Tumakuru Road near Peenya turned dramatic when a verbal disagreement between a woman passenger and the driver escalated into a physical confrontation, with… pic.twitter.com/pGkqZNB1y5
சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவில், கர்நாடக மாநில அரசு பேருந்தில் பயணம் செய்தபோது டிரைவருடன் பெண் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறுகிறது. அப்போது அங்கு இருந்த கண்டக்டர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனாலும், மோதல் தீவிரமாகி விடுகிறது.
இதில் குறிப்பாக அந்த பெண் பயணி டிரைவரை சண்டை போட்டு தாக்கும் காட்சிகளும் இதில் அடங்கியுள்ளன. இந்தக் காட்சிகளை வெளியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவில் பெண் பயணியுடன் மோதலில் ஈடுபட்ட டிரைவரின் பெயர் ரவி என தெரியவந்துள்ளது. BMTC பேருந்தில் ஓராண்டுக்கும் மேலாக அவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
எதற்காக தகராறு ஏற்பட்டது
முதல் கட்ட விசாரணையில் டிரைவர் மீதுதான் தவறு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான துறை ரீதியான விசாரணைக்கு BMTC அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பேருந்தை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதாகவும், தேவையில்லாமல் திடீர் பிரேக் போட்டதாகவும், இதனால் சில பயணிகள் காயம் அடைந்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், டிரைவருக்கும் பெண் பயணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணைக்காக உரிய அதிகாரிக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் பீன்யாவில் துமகூரு சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். "பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது" என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "அந்த பெண் பயணியிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். சிலர் டிரைவரின் நடத்தை தான் ஆணவமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஒரு நெட்டிசன் கூறுகையில், "இந்த ரூட்டில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் போதிய அவகாசம் கொடுக்காமலே டிரைவர்கள் வண்டியை எடுத்து செல்லும் சம்பவங்கள் வழக்கம். குறுகிய தூரம் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் கொடுக்காமலும் பல conductors செய்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளால் பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நடப்பது வழக்கம்தான்" என பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications