கண்ட காட்சி.. காதலனின் இன்ஸ்டாவை பார்த்த காதலிக்கு அதிர்ச்சி.. "அந்த" போட்டோஸ்.. ரோட்டிலேயே தர்ம அடி
பெங்களூர்: காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சென்னையை சேர்ந்த மருத்துவர் சரமாரியாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது காதலியின் நண்பர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னை மருத்துவர்
சென்னையைச் சேர்ந்தவர் விகாஷ் (27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு திரும்பிய அவர், சென்னையில் இரண்டு ஆண்டுகளாக பகுதிநேர மருத்துவராக பணிபுரிந்து வந்தார். பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற அவர், இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் தேர்வுக்கு தயாராகி வந்தார். உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள், இந்தியாவில் முழுநேர மருத்துவராக பணியாற்ற வேண்டுமானால், இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

பெங்களூரு பெண்ணுடன் காதல்
இதற்காக பெங்களூரில் பிடிஎம் லேஅவுட் பகுதியில் அவர் வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் விகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வது குறித்தும் பேசி வந்துள்ளனர். பல நேரங்களில் விகாஷுடன் அவரது காதலி தனிமையில் இருந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

நிர்வாணப் புகைப்படங்கள்
இந்த சூழலில், கடந்த 8-ம் தேதி விகாஸ் தனது காதலியுடன் திரைப்படத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் காரில் வீடு திரும்பும் போது, விகாஸின் லேப்டாப்பை அவரது காதலி திறந்து பார்த்துள்ளார். அப்போது தனது நிர்வாணப் புகைப்படங்களை விகாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் விகாஸுடன் இதுகுறித்து கேட்ட போது, "நாம் திருமணம் செய்துகொள்ள தானே போகிறோம். பின்னர் இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என அலட்சியமாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாதி வழியிலேயே அவரது காதலி காரில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்.

கொலைவெறி
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது நண்பரான சுஷீலிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து, கடந்த 10-ம் தேதி இரவு விகாஷை தொடர்புகொண்ட சுஷீல், தனது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதன்பேரில் விகாஷும் அங்கு சென்றிருக்கிறார். அப்போது சுஷீலுடன் விகாஷின் காதலி மற்றும் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது குறித்து சுஷீலும் அவரது நண்பர்களும் விகாஷிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது, விகாஷை சுஷிலும் அவரது நண்பர்களும் சேர்ந்து கிரிக்கெட் மட்டை, இரும்புக் கம்பி போன்றவற்றால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விகாஷ் மயங்கி விழுந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை
இதனை பார்த்து பயந்து போன விகாஷின் காதலி, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரது நிலைமையை பார்த்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, 11-ம் தேதி அதிகாலை செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் விகாஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த விகாஷின் பெற்றோர், பெங்களூருக்கு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்த போலீஸார், சுஷீலை நேற்று கைது செய்தனர். மேலும், அவருடன் சேர்ந்து விகாஷை தாக்கிய கவுதம், சூர்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications