காங். முக்த் பாரத் இல்லை.! பாஜக முக்த் தென்னிந்தியா தான்! சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் நறுக்
பெங்களூர்: கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை இப்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே இந்தத் தேர்தல் வெற்றி குறித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அங்கே ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெற்று வந்தது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது, பாஜக முன்னிலையில் இருந்தது. இருப்பினும், தேர்தல் நாளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பித்தவுடன் நிலைமை மாறியது.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே 113 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆளும் கட்சியாக மாறும். முதலில் காங்கிரஸ் சுமார் 100 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் நிலைமை மெல்ல மாறியது.வாக்கு எண்ணிக்கை செல்ல செல்ல காங்கிரஸ் அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது.
இப்போது காங்கிரஸ் சுமார் 130+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக சுமார் 70 இடங்களில் மஜத சுமார் 30 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் யாருடைய அதுவும் இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.
இந்த வெற்றியைக் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில் இருக்கும் அலுவலகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி பெற்ற இந்த மகத்தான வெற்றியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டியே வருகின்றனர்.
இதனிடையே கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்த போலத் தான் கர்நாடக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. பாஜக இந்த தேர்தலில் வெல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தது. பிரதமர் மோடியே நேரடியாகக் கர்நாடக மக்களிடம் பல பேரணிகளில் கலந்து கொண்டார்.
மோடி தன்னை முன்வைத்தே வாக்குகளைக் கேட்டார். எனவே, இந்தத் தோல்வி மோடியின் தோல்வி. இந்தத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதே அவர்கள் அறிந்தே இருந்தார்கள் இதன் காரணமாகவே ஊடகங்களில் அவர்கள் மோடிக்குப் பதிலாக ஜேபி நட்டாவின் போட்டோவை பயன்படுத்தினர்.

ராகுல் காந்தி நாடு முழுக்க ஒற்றுமை பாத யாத்திரை சென்ற போது, நானும் அவருடன் சென்றிருந்தேன். அப்போது வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, 40% கமிஷன் போன்றவற்றால் மக்கள் சோர்ந்து போயிருப்பதை அறிந்தேன். காங்கிரஸ் மக்களுடன் இணைந்து அவர்களுக்கு எதிராகப் போராடினார்கள். சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் ஹிமாச்சல பிரதேசத்தை வென்றோம்.. அதன் பிறகு இப்போது கர்நாடகாவை வென்றுள்ளோம்... அவர்கள் காங்கிரஸ் முக்த் பாரத்' என்று பேசினர், ஆனால் இப்போது தென்னிந்தியா 'பாஜக முக்த்' ஆக மாறியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் 120-130 இடங்கள் வரை வெல்லும் என்றே தெரிகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications