கோலி-கம்பீர்-நவீன் உல்ஹக் மோதல்.. பிள்ளையார் சுழி போட்ட முகமது சிராஜ்? அப்படியா? காரணம் இதுதானாமே
பெங்களூர்: ஐபிஎல்லில் நேற்று பெங்களூர்-லக்னோ அணிகள் மோதின. இதில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் நேற்றைய மோதலை பெங்களூர் அணியின் முகமது சிராஜ் தொடங்கி வைத்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படி அவர் என்ன செய்தார்? என்பது பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

மைதானம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூர் வென்ற நிலையில் அடுத்தக்கட்ட பரபரப்பு என்பது அதன்பிறகே தொற்றியது. அதாவது இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் கை குலுக்கி சென்றனர். அப்போது லக்னோ அணி பயிற்சியாளரான கம்பீருக்கும், பெங்களூர் அணியின் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு அணி வீரர்கள், நடுவர்கள் தலையிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர்.

முன்னதாக போட்டியின்போது லக்னோ பேட்டிங் செய்தபோது 17வது ஓவரை பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அப்போது லக்னோ அணியின் நவீன் உல் ஹக் கிரீஸ்க்குள் நின்றாலும் கூட சிராஜ் பந்தை ஸ்டெம்ப் மீது வீசினார். இருவருக்கும் இடையே வார்த்தை பரிமாற்றம் நடைபெற்றது. இதையடுத்து தான் நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி நடுவர், லக்னோ வீரர் அமித் மிஸ்ரா இருவரும் உடனடியாக தலையிட்டு கோலியையும், நவீன் உல் ஹக்கையும் சமாதானம் செய்தனர். அதன்பிறகு நவீன் உல் ஹக் கேட்ச் மூலம் அவுட் ஆகினார்.
இறுதியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கோலி ஆக்ரோஷமாக வெற்றியை கொண்டாடினார். முந்தைய போட்டியில் பெங்களூர் அணி தோற்றபோது கம்பீர் ஆர்சிபி ரசிகர்களை பார்த்து பேசாமல் இருக்கும்படி சைகையில் கூறினார். அதேபோல் கோலியும் செய்தார். மேலும் கோலியுடன் கை குலுக்கியபோது நவீன் உல் ஹக் திடீரென கோலியின் கையை பிடித்து லேசாக இழுத்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து லக்னோ வீரர் கெயில் மையிஸ் கோலியுடன் பேசியபோது கம்பீர் குறுக்கீட்டார். கோலியிடமிருந்து மையிசை தனியே அழைத்து சென்றதால் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் முகமது சிராஜ் தான் மோதலுக்கு காரணம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது முகமது சிராஜ் தான் வீசிய 17 வது ஓவரில் ஸ்டெம்பில் பந்தை கொண்டு எறியாமல் விட்டு இருந்தால் பிரச்சனை என்பது வந்திருக்காது என ரசிகர்கள் இணையதளங்களில் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications