மாணவியுடன் உல்லாசம்.. வீடியோவை நண்பர்களுக்கு காட்டி கூட்டு பலாத்காரம் செய்த காதலன்.. கசிந்த வீடியோ
பெங்களூர்: பெங்களூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய காதலன் அவருடன் உல்லாசம் அனுபவித்ததோடு, அதனை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டார். பிறகு அந்த வீடியோவை நண்பர்களுக்கு காட்டி உள்ளதோடு அவர்களின் ஆசையை நிறைவேற்ற காதலியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளார். மேலும் கூட்டு பலாத்காரத்தையும் வீடியோ எடுத்து மிரட்டிய நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவியின் காதலன் உள்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் மாகாடி பகுதியை சேர்ந்தவர் விகாஷ். கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். கல்லூரி மாணவியிடம், விகாஷ் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். மேலும் மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த வேளையில் விகாஷ், மாணவிக்கு தெரியாமல் அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். பிறகு அந்த வீடியோவை விகாஷ் தனது நண்பர்களான கல்லூரி நண்பர் பிரசாந்த் மற்றும் எலக்ட்ரீஷியனான சேத்தன் என்பவரிடம் காண்பித்துள்ளார். இதில் சேத்தனுக்கு திருமணம் ஆகிவிட்டது.
விகாஷ் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை பார்த்த பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகியோரும் கல்லூரி மாணவியுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்பி உள்ளனர். இதுபற்றி விகாஷிடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் பிளான் போட்டனர். விகாஷ் தனது காதலியை கடந்த அக்டோபர் மாதம் சேத்தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
மாணவியும் அங்கு சென்றுள்ளார். அதன்பிறகு விகாஷ், பிரசாந்த், சேத்தன் ஆகியோர் மாணவியை பலவந்தமாக உறவுக்கு அழைத்துள்ளனர். மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்தவர்கள் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி மாணவியை பணிய வைத்து உறவு வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அதனையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர்.
பிறகு அந்த வீடியோவையும் காண்பித்து 3 பேரும் மாணவியை கட்டாய உறவுக்கு அழைத்துள்ளனர். இதற்கிடையே தான் மாணவியுடன் அவர்கள் சேர்ந்து இருக்கும் வீடியோவை திடீரென்று இணையதளங்களில் வெளியானது. அது பலருக்கும் சமூக வலைதளங்களில் பரவியது. இதுபற்றி அறிந்து மாணவி அதிர்ச்சியடைந்தார். மேலும் 3 பேரில் யாராவது ஒருவர் தான் வீடியோவை கசியவிட்டு இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இதனால் செய்வதறியாது திகைத்து போனார். வேறு வழியின்றி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் அதனை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசில் புகார் செய்ப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் காதலன் விகாஷ், அவரது நண்பர்களான சேத்தன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications