மோடியை வைத்து அரசியல் ஸ்டண்ட் அடிக்கதான் பொம்மசந்திரா, எலக்ட்ரானிக்சிட்டி, சில்க்போர்டு மெட்ரோவா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே டிரைவர் இல்லா அதிநவீன மெட்ரோ ரயில் சேவை வரும் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கு பெங்களூர் நம்ம மெட்ரோ மஞ்சள் நிற பாதை (Bangalore Namma Metro's Yellow Line) என பெயரிடப்பட்ட இந்த வழித்தடத்தில் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட மிக முக்கிய ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், இங்கு 25 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்ற நம்ம மெட்ரோவின் அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்பட கூடிய பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை. சில கிலோ மீட்டர் தூரம் போவதற்கே மணிக்கணக்கில் டிராபிக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். உலக அளவில் டிராபிக் அதிகம் நிலவும் நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. இதனால் பயணிகள் பலரும் பொதுப்போக்குவரத்து சேவையை நாடுவது அதிகரித்துள்ளது.

Bangalore Namma Metro Yellow Line Metro rail RV Road Bommachandra

ஆர்வி ரோடு - பொம்மசந்திரா வரை

பெங்களூரை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. ஒயிட்பீல்டு முதல் சல்லகட்டா வரை ஊதா நிற பாதையிலும், மாதவராவில் இருந்து சில்க் நிறுவனம் வரை பசுமை நிற பாதையிலும் சுமார் 76 கிலோ மீட்டா் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பசுமை நிற பாதையில் உள்ள ஆர்.வி. ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.5,263 கோடியில் புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதைக்கு 'மஞ்சள் நிற பாதை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக டிரைவர் இல்லா அதிநவீன மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் அனைத்து பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. பல்வேறு கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, பயணிகள் சேவையை தொடங்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கினார்.

வரும் 10 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது

இந்த பாதையில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்க 15 ரயில்கள் தேவைப்படும் சூழல் உள்ளது. ஆனால், தற்போது போதுமான எண்ணிக்கையில் ரயில்கள் இல்லை. தற்போது 3 ரயில்கள் மட்டுமே உள்ளன. இதை வைத்து 25 நிமிடங்களுக்கு ஒரு ரயில் தான் இயக்க முடியும். இந்த நிலையில் மஞ்சள் நிற பாதையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வருகிற 10 ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூர் வருகிறார். இந்த பயணத்தின் போது பெங்களூர் ஆர்.வி. ரோடு - பொம்மசந்திரா பாதையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். புதிதாக தொடங்கப்பட இருக்கும் ரயில் பாதையில் எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, ஜெயதேவா மருத்துவமனை போன்ற முக்கியப் பகுதிகளை இணைத்து செல்கிறது. மொத்தம் ஆர்வி ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை 15 ரயில் நிலையங்கள் உள்ளன.

கடும் அதிருப்தி தெரிவித்த பயணி

பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு மிகவும் முக்கியமானதாக இந்த ரயில் சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 25 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை என்பது பயணிகளுக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், "மஞ்சள் பாதை திறந்த பிறகு இனி பைக்கை நம்பியிருக்க வேண்டியது இல்லை. தினமும் ரயிலிலேயே எலக்ட்ரானிக் சிட்டிக்கு சென்றுவிட்டு வரலாம் என நினைத்தேன். ஆனால் 25 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்பதையும், அங்கு இருக்க கூடிய கூட்டத்தையும் நினைத்து பார்க்கும் போது ரொம்பவே அச்சமாக உள்ளது" என்றார்.

எந்த பயனும் இல்லை என பயணி கருத்து

பொம்மனஹல்லி பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் பயணி கூறுகையில், "இது வெறுமனே சம்பிரதாய திறப்பு விழா கலாசாரம் போல தெரிகிறது. அடுத்த வருடம் வரை முழு அளவில் ரயில் சேவை தொடங்காது. இதனால் தற்போது எந்த பயனும் இல்லை. பொது போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தேவைக்காக இருக்க வேண்டும். அரசியல் தேவைக்காக இருக்கக்கூடாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+