தனிமையில் வாடிய விதவை.. ஆறுதல் வலைவீசிய இளைஞர்.. நண்பரின் மனைவியையே மறுமணம் செய்து.. சபாஷ்
நண்பரின் மனைவியை மறுமணம் செய்த இளைஞருக்கு பாராட்டு குவிகிறது
பெங்களூரு: நண்பரின் மனைவியையே திருமணம் செய்து கொண்டார் ஒரு இளைஞர்.. இந்த திருமணம் செய்ததன் பின்னணிக்காகவே, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா அருகே உள்ளது முள்ளூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் சேத்தன்குமார் 41 வயதாகிறது.
இவரது மனைவி பெயர் அம்பிகா.. ஹனூர் டவுனை சேர்ந்தவர்.. 30 வயதாகிறது.. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது..

கர்நாடகா
சேத்தன்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. இந்நிலையில், கொரோனா 2-வது அலையின்தாக்கம் கர்நாடகாவில் அதிகரிக்க ஆரம்பித்தது.. அப்போது ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.. அந்த சமயத்தில் சேத்தன்குமாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. உடனடியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

பாதிப்பு
எனினும், தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்... கணவரின் மரணம் அம்பிகாவை நிலைகுலைய வைத்துவிட்டது.. கணவனை மறக்க முடியாமல், அவரது இறப்பை ஜீரணிக்கவும் முடியாமல் பரிதவித்தார்.. எந்நேரமும் அழுது கொண்டே இருந்தார்.. யாராலும் அம்பிகாவை சமாதானப்படுத்த முடியவில்லை.. ஒருகட்டத்தில் அம்பிகா தற்கொலைக்கும் முயன்றார்.. இந்த விஷயம் சேத்தன்குமாரின் நண்பர் லோகேஷ், என்பவருக்கு தெரிந்து விரைந்து வந்தார்.

திருமணம்
தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை உடனடியாக காப்பாற்றினார். அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி சமாதானப்படுத்தினார்.. இதைதொடர்ந்து சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்... இதற்கு அம்பிகாவும் சம்மதம் சொன்னார்.. இருவருமே அவரவர் வீட்டினரிடம் விஷயத்தை சொல்லவும், அவர்களும் இந்த கல்யாணத்துக்கு பச்சை கொடி காட்டினர்.

வாழ்த்துக்கள்
இதையடுத்து, அம்பிகாவுக்கும், லோகேசுக்கும் பெங்களூருவில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.. நண்பரின் மனைவியை தற்கொலையில் இருந்து மீட்டதுடன், மறுமணமும் செய்த லோகேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. இந்த தம்பதிக்கு நட்பு வட்டத்தில் இருந்தும், உறவினர்கள் வட்டத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications