லீக்கான ஆடியோ.. மல்லிகார்ஜூன கார்கேவை கொல்ல பாஜக சதித்திட்டம்.. பகீர் கிளப்பிய காங்கிரஸ்! பரபரப்பு
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை பாஜக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அக்கட்சி ஆடியோவை வெளியிட்டு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பது கர்நாடகா அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சொந்த மாநிலமான கர்நாடகாவில் தேர்தலை சந்திக்கிறார்.

இதனால் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு அதிகம் உள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் கர்நாடகாவிலேயே முகாமிட்டு மல்லிகார்ஜூன கார்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பாஜக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி விஷப்பாம்பு என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை பாஜக கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பில் மணிகண்ட ராதோட் களமிறங்கி உள்ளார். இவர் சர்ச்சைக்குரிய நபராக இருக்கிறார். இவர் மீது 30க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக பாஜக அவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்வதாக மணிகண்ட ராதோட் பாஜகவை சேர்ந்த ஒருவருடன் பேசும் ஆடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளது.
அந்த ஆடியோவில் மணிகண்ட ராதோட் பாஜகவின் ரவி என்பவரோடு பேசுகிறார். அதில், தன்னை பற்றி தவறாக பேசியது பற்றி காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்க வேண்டும் என அவர் கூறுவதோடு, என்னிடம் மட்டும் மல்லிகார்ஜூன கார்கேவின் செல்போன் எண் இருந்தால் அவர், மனைவி, அவரது குழந்தைகளை கொன்றுவிடுவேன் என ஆக்ரோஷமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது. இதுபற்றி பெங்களூரில் கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:
‛‛காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது மனைவி, மகன்களை கொலை செய்து விடுவதாக கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அப்படி பேசுவது சாதாரண நபர் இல்லை. அவர் பாஜக வேட்பாளர். பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் பொம்மையின் செல்லப்பிள்ளையான சித்தாப்புராவில் போட்டியிடும் நபர்.அவரது முந்தைய வரலாறு எல்லாம் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த விஷயத்தில் பாஜக அமைதியாக இருக்கிறது. ஆனால் மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் பாஜகவுக்கு உரிய பதிலடி கொடுப்பார்கள்'' என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications