முஸ்லிம் ஓட்டுகளில்தான் காங்கிரஸின் கவனம் உள்ளது -RSSஐ விமர்சித்ததால் பொங்கிய கர்நாடக கல்வி அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: முஸ்லிம் ஓட்டுகளில்தான் எப்போதும் காங்கிரஸின் கவனம் உள்ளது என கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரக்கூடிய ஹிஜாபுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

பெரியார், திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கம்

பெரியார், திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கம்

இந்த புதிய குழு, வரும் கல்வியாண்டுக்கான மொழி மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தந்தை பெரியார், நாராயண குழு உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள், முற்போக்கு கருத்து கொண்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் அகற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆர்.எஸ்.எஸ். பாடங்கள்

ஆர்.எஸ்.எஸ். பாடங்கள்

அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவரின் பேச்சுக்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

குழு கலைப்பு

குழு கலைப்பு

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டு உள்ள அறிக்கையில், பாடநூல்களை வடிவமைத்த குழுவை கலைப்பதாக அறிவித்தார். பாடநூல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக இந்த முடிவை எடுப்பதாக கூறினார். புத்தகங்கள் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதை அரசாங்கமே மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

 சித்தராமையா விமர்சனம்

சித்தராமையா விமர்சனம்

கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பை முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "திரும்பப்பெற வேண்டியது பாடபுத்தகங்களைதானே தவிர, பாட புத்தகங்களை தயாரித்த குழுவை அல்ல. அவர்கள் தங்களின் நோக்கத்தை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டனர்.

கர்நாடக கல்வி அமைச்சர் விளக்கம்

கர்நாடக கல்வி அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அவர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் மட்டுமே முக்கியம். அவர்கள் எப்போதுமே முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+