தி ரியல் “கேஜிஎப்”..ஆளப்போகும் பெண் “ராக்கி பாய்”! பிரமாண்ட வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று இருக்கும் சூழலில், சினிமாவின் மூலம் மிகவும் பிரபலமான கேஜிஎப் தொகுதியில் பாஜகவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா.
கேஜிஎப். இந்த பெயரை தெரியாத இந்திய சினிமா ரசிகர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பிரபலம். கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அனைவராலும் அறியப்படும் தொகுதியாக கேஜிஎப் உள்ளது. அதற்கு காரணம் ராக்கி பாய் யாஷும், கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீலும்தான்.

கன்னட திரையுலகை சர்வதேச தரத்துக்கு கொண்டு சென்ற இந்த கேஜிஎப் திரைப்படம், இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை யாஷுக்கும், பிரசாந்த் நீலுக்கும், கன்னட திரையுலகிற்கும் கொடுத்தது. அந்த அளவுக்கு மாஸ் மசாலா திரைப்படங்கள்தான் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2.
கோலார் தங்க வயலின் பின்னணியில் இருக்கும் அரசியல், அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்கள் குறித்து பேசும் அந்த படம் 2 ஆம் பாகத்துடன் முடிந்துவிடும் என்று பார்த்தால், படத்தின் 3 வது பாகத்துக்கும் லீடு கொடுத்திருந்தார் இயக்குநர். ராக்கி பாய் மீண்டு வருவாரா.. கேஜிஎப்-ஐ ஆள்வாரா என்று அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றன.
இந்த நிலையில், கேஜிஎப் ஐ உண்மையில் ஆளப்போவது யார் என்பது நேற்று தெரியவந்து இருக்கிறது. ஆம், கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதில் கோலா தங்க வயல் எனப்படும் கேஜிஎப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா பிரம்மாண்ட வெற்றியை பெற்று இருக்கிறது.
தனித்தொகுதியான கேஜிஎப்-இல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஸ்வினி சம்பங்கி, காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபா கலா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் ரமேஷ் பாபு, இந்திய குடியரசு கட்சி சார்பில் எஸ்.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி தங்கராஜ், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ககனா சுகன்யா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோடண்டா மற்றும் 2 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா 80,924 வாக்குகளை பெற்று சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று உள்ளார். 2 வது இடத்தை பிடித்து இருக்கும் பாஜக வேட்பாளர் அஸ்வினி சம்பங்கி 30,750 வாக்குகளை பெற்று உள்ளார். மூன்றாவது இடத்தை பிடித்து உள்ள இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் 29,662 வாக்குகளை பெற்று உள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications