கர்நாடகா: பெலகாவியில் இன்று காங்கிரஸ் செயற்குழு- அமித்ஷா டிஸ்மிஸ் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள்?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் (காங்கிரஸ் காரிய கமிட்டி) இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த செயற்குழுவில் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் இன்று கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இன்று நடைபெற உள்ளது. 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி பெலகாவியில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டின் 100-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் பெலகாவியில் காந்தி நடத்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற அதே இடத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள், கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளன். இந்த மாநாட்டையொட்டி காந்தி சிலை திறக்கப்பட உள்ளது. இதன் பின்னர் ஜெய் அரசியல் சாசனம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்ச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இம்மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை ஒட்டி பெலகாவி பகுதியில் இன்றும் நாளையும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்











Click it and Unblock the Notifications