முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் ஓபிசி பட்டியலில் முஸ்லிம்களை காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசி உள்ளார். இது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சிக்கும், அதன் தலைவர் தேவகவுடாவுக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பிரதமர் மோடியின் பேச்சை சாதகமாக பயன்படுத்தி கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெல்ல திட்டமிட்டுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் என்பது தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துவிட்டது. 2வது கட்ட தேர்தல் என்பது நாளை 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் சொத்தில் முஸ்லிம்களுக்கு தான் முதல் அதிகாரம் என காங்கிரஸ் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை ஓபிசி பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்ததாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே தான் இன்று மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடந்த பாஜகவின் விஜய சங்கல்ப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போதும் அவர் கர்நாடகாவில் முஸ்லிம்களை ஓபிசி பிரிவில் காங்கிரஸ் சேர்த்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில் , ‛‛அவர்கள் (காங்கிரஸ்) மீண்டும் மதத் துவேஷத்தை கையில் எடுத்துள்ளனர். கர்நாடகாவில் தற்போது அவர்களின் ஆட்சி நடக்கிறது. அங்கு அனைத்து முஸ்லிம்களையும் ஓபிசி என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
புதியவர்களை (முஸ்லிம்களை) இணைத்துள்ளதன் மூலம் ஓபிசி பிரிவினருக்கான கல்வி இடஒதுக்கீடு மற்றும் அரச வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீடு மற்றவர்களுக்கு ரகசியமாக தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினருக்கு காங்கிரஸ் கட்சி எதிரி. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஓபிசி மக்களின் உரிமைகளை பறிக்கிறது. அதோடு அரசியலமைப்பு சட்டத்தை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்துள்ளது'' என காட்டமாக பேசினார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையாக பதிலடி கொடுத்துள்ளார். அதோடு கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்தது பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் தேவகவுடா தான் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சித்தராமையா கூறியுள்ளதாவது:
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேவகவுடா தான் 1995ம் ஆண்டில் கர்நாடகாவில் முஸ்லிம்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால் பிரதமர் மோடி காங்கிரஸ் என கூறுகிறார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்வோம் என்று ஒரு காலத்தில் கூறிய தேவகவுடா இப்போதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா ? இல்லாவிட்டல் நரேந்திர மோடியிடம் சரணடைந்து தனத நிலைப்பாட்டை மாற்றி கொள்வாரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டு்ம.
கர்நாடகாவில் 1995ம் ஆண்டில் ஜேடிஎஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போ தேவகவுடா முதல்வராக இரந்தார். இந்த சமயத்தில் ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க 2பி என்ற பிரிவு கொண்டு வரப்பட்டது. இது செயல்பாட்டில் இருந்து வந்தது. இதற்கிடையே தான் முந்தைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்த செய்தது. அதோடு முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்த்தது.
மேலும் ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ஒக்கலிகர் மற்றும் லிங்காயத் சமுதாயத்துக்கு 3ஏ மற்றும் 3 பி பிரிவில் வழங்கப்பட்டது. இதில் லிங்காயத் சமுதாயம் என்பது பாஜகவின் ஓட்டு வங்கியாகும். ஒக்கலிகர் என்பது ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் பாஜக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை மீண்டும் ஓபிசி பட்டியலில் சேர்த்துள்ளது. இந்நிலையில் தான் முஸ்லிம்களை ஓபிசி பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்தால் கர்நாடகாவில் தேவகவுடாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தான் தேவகவுடா உள்ளார். தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த பேச்சு என்பது தேவகவுடாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை தேவகவுடா பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்தால் அது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும். ஒருவேளை கருத்து சொல்லாமல் அமைதி காத்தால் ஜேடிஎஸ் கட்சியில் உள்ள முஸ்லிம் நிர்வாகிகள் அதிருப்தியடைவார்கள். இதனால் பிரதமர் மோடி கூறிய ஓபிசி இடஒதுக்கீட்டை வைத்து கர்நாடகாவில் ஜேடிஎஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு செக் வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் நாளை முதற்கட்டமாக பெங்களூரில் உள்ள 3 தொகுதிகள் உள்பட தென்கர்நாடகா மாவட்டங்களில் உள்ள 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மீதமுள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கு மே மாதம் 7 ம் தேதி 2ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications