கர்நாடகா: 60 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவும் டி.கே. சிவகுமார்? விடாமல் கொளுத்திப் போடும் குமாரசாமி
பெங்களூர்: கர்நாடகாவில் 50 முதல் 60 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் சீனியர் அமைச்சர் ஒருவர் பாஜகவுக்கு தாவப் போகிறார்; கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி கவிழப் போகிறது என பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட கூடுதலான தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். பாஜகவுக்கு 66 இடங்களும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 இடங்களும்தான் கிடைத்தன.

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த குமாரசாமி, காங்கிரஸ் ஆட்சி கவிழப் போகிறது என கூறி வருகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல தற்போதும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழப் போகிறது என கூறி வருகிறார் குமாரசாமி.
இந்த நிலையில் ஹாசனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகா அமைச்சரவையில் உள்ள சீனியர் ஒருவர் விரைவில் 50 முதல் 60 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ இருக்கிறார். கர்நாடகா அரசு விரைவில் கவிழப் போகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே நன்றாக இல்லை. சித்தராமையா தலைமையிலான அரசு எப்போது கவிழும் என்பது எனக்கு தெரியவில்லை. அந்த சீனியர் அமைச்சர் தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கிறார். மத்திய அரசு அந்த அமைச்சர் மீது போட்ட வழக்குகளில் இருந்து அவரால் தப்பிக்கவே முடியாது.
மகாராஷ்டிராவில் (சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது) எப்படி அரசியல் மாற்றம் நிகழ்ந்ததோ அதேபோல கர்நாடகாவிலும் நடக்கப் போகிறது. இந்த அரசியல் தலைகீழ் மாற்றமும் ஆட்சி கவிழ்வதும் கர்நாடகவில் எந்த நேரத்திலும் நடக்கலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தத்துவம், சித்தாந்தம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தற்போதைய சூழ்நிலைகள் அரசியல் சூழ்நிலைகளை புரட்டிப் போடப் போகின்றன. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடகா காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாரை குறிவைத்துதான் இத்தகைய கருத்துகளை குமாரசாமி தெரிவித்து வருகிறார். டிகே சிவகுமார், தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜக பக்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் தாவுவார் என்கிறார் குமாரசாமி.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications