கேபினட்டில் இடம் இல்லை.. டென்ஷனான காங்கிரஸ் முக்கிய தலைவர்கள்.. வெடித்த போராட்டம்! மீண்டும் தலைவலி!
பெங்களூர் : கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், கேபினட்டில் இடம் கிடைக்காத தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவையில் சாதி மற்றும் பகுதி வாரியாக அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேபினட்டை அமைத்துள்ளது. கர்நாடக அரசில் அதிகபட்சமாக 34 அமைச்சர்கள் இருக்கலாம்.

கடந்த வாரம், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை அமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், இன்று 24 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, புதிய அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டது. புதிதாக 24 பேர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் 24 அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களில் லிங்காயத் சமூகத்தினர் 7 பேர், வொக்கலிகர் சமூகத்தவர் 4 பேர், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி, அனைத்து சமூகத்தவரையும் பார்த்துப் பார்த்து கேபினட்டில் இடம் கொடுத்திருந்தாலும் சில அதிருப்திகள் வெடித்துள்ளன.
கர்நாடகாவில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய ருத்ரப்ப லமானியின் ஆதரவாளர்கள் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) அலுவலகம் முன்பு தங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"நேற்று இரவு வரை எங்கள் பஞ்சாரா சமூகத் தலைவர் ருத்ரப்பா லாமணியின் பெயர் கேபினட் பட்டியலில் இருந்தது. ஆனால் இன்று அவர் பெயர் பட்டியலில் இல்லை. எங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். தேர்தலில் காங்கிரஸுக்கு பஞ்சாரா சமூகத்தின் வாக்குகள் 75% கிடைத்தன. எனவே எங்கள் சமூகத்திலிருந்து ஒரு அமைச்சராவது இருக்க வேண்டும்" என்று ருத்ரப்பா லமானியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல, அமைச்சரவையில் இடம் கிடைக்காத தலைவர்களின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் டிபி ஜெயச்சந்திரா, கிருஷ்ணப்பா, பிரியகிருஷ்ணா ஆகியோரின் ஆதரவாளர்கள் அமைச்சரவையில் தங்கள் தலைவருக்கும் இடம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர்.
அதானி தொகுதி எம்எல்ஏ லட்சுமண் சவடியின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் சவதி. 2019 பாஜக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் லட்சுமண் சவதி.
023 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக அவருக்கு டிக்கெட் மறுத்ததை அடுத்து காங்கிரஸில் சேர்ந்தார். பெலகாவி பிராந்தியத்தில் பல இடங்களை வெல்வதற்கு காங்கிரஸ் அவரைப் பயன்படுத்தியதாகவும் ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவரைப் புறக்கணித்ததாகவும் சவடியின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications