திடீர் மூச்சுத்திணறல்.. மல்லிகார்ஜூன கார்கே பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு நேற்று நள்ளிரவில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூர் எம்எஸ் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனைகளுடன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜூன கார்கே. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே நேற்று பெங்களூரில் இருந்தார்.

இந்நிலையில் தான் நேற்று இரவில் திடீரென்று மல்லிகார்ஜூன கார்கேவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு இப்போது 82 வயது ஆகிறது. இவர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் பரிசோதகைனள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவரை சிறப்பு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது அவர் நலமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மல்லிகார்ஜூன கார்கேவின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்னும் எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. விரைவில் மருத்துவமனை அதுபற்றி அறிக்கை வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரம் உள்பட கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications