அன்று 'பென் டிரைவ்' மூலம் மிரட்டிய குமாரசாமி! இன்று பென் டிரைவ்வால் அசிங்கப்பட்ட அண்ணன் மகன்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 300 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ சர்ச்சையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி அண்ணன் மகன் பிரஜ்வல் ரேவண்ணா சிக்கியது அரசியல் விவகாரமாகவும் வெடித்திருக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு அப்பால் தேவகவுடா குடும்பத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை நம்பி இருக்கிறது. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டது காங்கிரஸ். அக்கட்சிக்கான ஒக்கலிகா கவுடா வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்துவிட்டது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் மீதும் துணை முதல்வர் டிகே சிவகுமார் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறது தேகவுடா குடும்பம்.

Congress questions Kumaraswamy on Prajwal Revanna Pen Drive Videos

சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்டார் மாஜி முதல்வர்- தேவகவுடா மகன் குமாரசாமி. அத்துடன் ஊழல் விவகாரங்களை இதோ இந்த பென் டிரைவில்தான் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் அலட்டிக் கொண்டார் குமாரசாமி.

தற்போது ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளரான சிட்டிங் எம்பியும் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவின் மகனுமாகிய பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாசன் தொகுதி முழுவதும் பிரஜ்வலின் ஆபாச வீடியோ அடங்கிய சிடி, பென் டிரைவ்கள்தான் காட்டுத் தீயாக பகிரப்பட்டும் வருகிறது.

இப்போது காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டிகே சிவகுமார், என் கையில் பென் டிரைவ் இருக்கிறது.. பென் டிரைவ் இருக்கிறது என்றெல்லாம் குமாரசாமி சொன்னார்.. ஓஹோ.. அந்த பென் டிரைவில் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள்தான் இருக்கிறதா? என கிண்டலடித்துள்ளார்.

பென் டிரைவ்வை கையில் எடுத்துக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழங்கிக் கொண்டிருந்த குமாரசாமிக்கு நோஸ் கட்டாக பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச பென் டிரைவ் விவகாரத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+