Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா.. அடித்து ஆடும் சித்தராமையா - டிகே சிவக்குமார்.. நாளையே அமைச்சரவை விரிவாக்கம்.. 24 பேரா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை விரிவாக்குவது தொடர்பாக டெல்லியில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நாளை கர்நாடகாவில் கூடுதலாக 24 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

Congress to expand Karnataka Cabinet tomorrow: 24 ministers to swear in according to sources

அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் இந்த படுதோல்வி அதிமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.அங்கே ஆளும் கட்சியாக இருந்தும் கூட, பிரதமர் தீவிர பிரச்சாரங்களை செய்தும் கூட பாஜக ஆட்சியை இழந்து உள்ளது.

முதல்வர் தேர்வு மோதல்:

கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா அந்த கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வாகி இருக்கிறார். இவர்கள் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.

அங்கே முதல்வரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவி வந்தது. முதல்வர் பதவிக்கு அங்கே சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவி வந்தது.

டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார்தான்.

அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர். இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அடையாளம், முகம், நிர்வாகிகள் பெரும்பாலும் இவர் பக்கம்தான், அரசியல் ராஜதந்திரி.

இதனால் இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில்தான் கடைசியில் அங்கே சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உட்பட 8 எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவிக்கு உறுதிமொழி ஏற்றனர்.

இன்னும் அங்கே முழுமையாக அமைச்சரவை தேர்வு நடந்து முடியவில்லை. இந்த நிலையில்தான் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக அது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

இஸ்லாமியர்கள் - ஜாதி பிரிவு

இஸ்லாமியர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது, வொக்கலிகா, லிங்காயத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது, குருபா மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடம் கொடுப்பது என்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், எம்பி ராகுல் காந்தி ஆகியோர் இது தொடர்பாக ஆலோசனை செய்தனர். கர்நாடக சட்டசபை விரிவாக்குவது தொடர்பாக டெல்லியில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்களின் லிஸ்ட் இறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம். நாளை கர்நாடகாவில் கூடுதலாக 24 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்களை தேர்வு செய்தாலும் அவர்களுக்கான இலாக்காக்களை ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+