சித்தராமையா 'நாற்காலிக்கு' நாள் குறித்த காங்கிரஸ் தலைவர்கள்.. புதிய முதல்வர் பதவி ரேஸில் 4 'தலைகள்'!
பெங்களூர்: மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் பதவி ஆட்டம் கண்டுள்ள் நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வர், எம்பி பாட்டீல், சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில் மும்முரமாக இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு அடுத்தடுத்து பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கி இருக்கிறது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான மூடா 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்த விவகாரம் பெரும் புயலாக கர்நாடகா அரசியலை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.

மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனடிப்படையில் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆளுநர் அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தொடக்கத்திலேயே சித்தராமையா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஆளுநர் கெலாட்டுக்கு எதிரான சித்தராமையா வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. இன்றைய விசாரணையின் முடிவில் சித்தராமையாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்வார்; அப்படி ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவி விலக காங்கிரஸ் மேலிடம் உத்தரவிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்தராமையா பதவி விலகினால் அடுத்த முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் மூத்த அமைச்சர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த ரேஸில் முதலிடத்தில் இருப்பவர் கர்நாடகா துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார். இவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, அமைச்சர்கள் எம்பி பாட்டீல், சதீஸ் ஜார்கிகோளி ஆகியோரது பெயர்களும் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபடுகிறது.
இந்த போட்டிக்கு நடுவே சதீஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்கள், அடுத்த முதல்வர் என போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் கர்நாடகா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications