'இது அனுமன் பூமி.. கிளம்புங்க'.. பாஜக தலைவர் ஒரே போடு.. கர்நாடகாவில் கிளம்பியாச்சு அடுத்த பஞ்சாயத்து

இதற்கு முன்னர் மாநிலத்தில் இந்துத்துவ அமைப்பினர் இதேபோன்று பல பிரச்னைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: "திப்பு சுல்தானை நேசிப்பவர்கள் ராமர் மற்றும் அனுமனின் மாநிலத்தில் வாழக்கூடாது" என்று கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் கூறியுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் இவ்வாறு பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் கர்நாடக மாநிலத்திற்கென சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாநிலத்தின் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், வறட்சியை ஈடுகட்ட ரூ.5,300 கோடியும் அறிவிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடக பாஜகவினர் இந்த தேர்தலை திப்பு சுல்தான் VS அனுமன் என சித்தரித்து வருகின்றனர். இந்த பரப்புரையின் ஒரு அங்கம்தான் நளின் குமாரின் பேச்சு. ஏற்கெனவே திப்பு பிறந்த நாள் விழாவை கைவிடுவதாக பாஜக அரசு அறிவித்தது. அதேபோல பாடப்புத்தகங்களில் உள்ள திப்பு குறித்த தகவல்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

 திப்பு VS அனுமன்

திப்பு VS அனுமன்

இதன் தொடர்ச்சியாக எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை திப்புவுக்கு எதிரான தேர்தலாக பாஜக தலைவர்கள் சித்தரித்து வருகின்றனர். நேற்று பொது கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், "நாங்கள் ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள். திப்புவின் வழித்தோன்றல்கள் அல்ல. மைசூரு ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்களை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். இந்த நம்பிக்கையுடன் எலபுர்கா மக்களிடம் நான் கேட்கிறேன். நீங்கள் திப்புவை வணங்குகறீர்களா அல்லது அனுமனை வணங்குகிறீர்களா? நான் உங்கள் முன்னிலையில் சவால் விடுகிறேன். அனுமனை வணங்கி ராமரின் பஜனையை பாடுபவர்கள்தான் இங்கு இருக்க வேண்டும். திப்புவை நேசிப்பவர்கள் இங்கு இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

நளின் குமாரின் இந்த பேச்சு மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் இவ்வாறு பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரி மாதம், "சாலைகள் மற்றும் சாக்கடைகள் பிரச்னையை விட 'லவ் ஜிகாத்' பிரச்னைக்குதான் நீங்கள் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல கடந்த வாரம், "தற்போது நடைபெற உள்ள தேர்தல் திப்புவுக்கும், சாவர்க்கருக்கும் இடையே நடைபெறும் மோதல்" என்று கூறியிருந்தார். இதுபோன்று சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர்தான் நளின் குமார். இவர் மீது இது போன்று ஏரளாமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

 இதற்கு முன்னரும்

இதற்கு முன்னரும்

இதற்கு முன்னர் மாநிலத்தில் இந்துத்துவ அமைப்பினர் இதேபோன்று பல பிரச்னைகளில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கல்புர்கியில் உள்ள ரயில் நிலையத்தின் கட்டிடம் பச்சை கலராக மசூதி போல இருப்பதாக கூறி அதற்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 'இந்து ஜாக்ருதி சேனே' அமைப்பினர்தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். கல்புர்கி பகுதியில் இது தொடர்பாக போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது. அதேபோல மைசூர் பேருந்து நிலையத்தின் கட்டிடம் மசூதி போல இருப்பதாக பாஜக எம்பி 'பிரதாப் சிம்ஹா' குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

 பாஜக எம்பி

பாஜக எம்பி

இந்த பேருந்து நிலையம் பார்ப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாகவும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் இதுபோன்ற கட்டிடங்கள் இந்துக்களின் மனங்களை புண்படுத்துவதாகவும் கூறியிருந்தார். எனவே இந்த பேருந்து நிலைய கட்டிடத்தை மாநகராட்சி இடிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நானே அதனை இடிப்பேன் என்று கூறினார். இதனையடுத்து அக்கட்டிடம் இடிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+