காங்கிரஸ் வந்ததும் முதல் விக்கெட் அவுட்.. திப்பு சுல்தான் பற்றி சர்ச்சை புத்தகம் எழுதியவர் ராஜினாமா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்து இருக்கும் நிலையில், மைசூர் மன்னர் திப்பு சுல்தான் குறித்து சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதிய, மைசூருவில் உள்ள அரசின் ரங்கநாயனா நாடக நிறுவனத்தின் இயக்குநர் அதந்தா சி கரியப்பா, தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவ்வில் ரங்கநாயனா என்ற பெயரில் அரசால் நடத்தப்படும் நாடக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக பதவி வகித்து வந்தவர் அதந்தா சி கரியப்பா. இவர் திப்பு நிஜா கனசுகளு (Real Dreams of Tipu) என்ற பெயரில் சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில், கர்நாடகாவின் கர்ப்பனை கதாப்பாத்திரங்களான சகோதரர்கள் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடாவை உண்மையாக வாழ்ந்தவர்கள் என்று சித்தரித்து இருந்த கரியப்பா, அவர்களை மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தான் கொலை செய்தார் என்று ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.
அதேபோல் ஏராளமான இந்து மக்களை திப்பு சுல்தான் கொன்று குவித்து இருப்பதாகவும் கரியப்பா தன்னுடைய புத்தகத்தில் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், கரியப்பாவின் புத்தகத்தில் இடம்பெற்று உள்ள இந்த தகவல்கள் உண்மை அல்ல என்றும், கற்பனை எனவும் வரலாற்று ஆய்வாளர்களே குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில் பாஜக அமைச்சராக இருந்த முனிரத்னா, உரி கவுடா, நஞ்சே கவுடா பெயரில் திரைப்படம் ஒன்றையும் தயாரிப்பதாக போஸ்டர் வெளியிட்டார். ஆனால், கவுடா எனப்படும் வொக்காலிகர்களின் புனித தளமான ஆதிசுன்சுனாகிரி மடத்தின் மதகுரு நிர்மலானந்தா சுவாமியே கரியப்பாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வரலாற்று தலைவர்களுக்கும், கற்பனை பாத்திரங்களுக்கும் மதச்சாயம் பூசப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கரியப்பா ரங்கநாயனா நாடக குழுவின் இயக்குநராக பதவியேற்ற பிறகு வலதுசாரி தலைவர் சக்கரவர்த்தி சுலிபெல்லேவை, நிறுவனத்தின் ஆண்டுவிழாவுக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர்கள், இயக்குநர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதேபோல் அந்த நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்தியதற்காகவும் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார் கரியப்பா. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன போராட்டங்களில் ஈடுபட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் இவர் பாஜகவுக்கு ஆதரவாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.

பாஜக எம்.எல்.ஏக்களாக இருந்த கேஜி போப்பையா மற்றும் அப்பாசு ரஞ்சன் ஆகியோரை ஆதரித்து நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் இவர் பிரச்சாரம் செய்தார். ஆனால், இருவருமே தேர்தலில் தோல்வியை தழுவினர். குடகு மாவட்டத்தில் இவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, பாஜகவுக்கு வாக்களிப்பது காசிக்கு யாத்திரை செல்வதை போன்றது.
காங்கிரஸுக்கு வாக்களிப்பது பாலியல் குற்றவாளிகளுக்கும், பாலியல் தொழில் செய்வோருக்கும் வாய்ப்பளிப்பதை போன்றது." என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்காக இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து இருப்பதால் நாடக நிறுவன இயக்குநர் பதவியில் இருந்தே விலகுவதாக அறிவித்து இருக்கிறார் கரியப்பா.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications